இதுவர யாரும் பார்க்காத உதயநிதி… ஆக்சனில் மிரட்டும் கலகத் தலைவன் ட்ரெய்லர்

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'கலகத் தலைவன்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

உதயநிதி, மகிழ் திருமேனி, மாரி செல்வராஜ், மிஷ்கின், சுந்தர் சி, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் கலகத் தலைவன் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டனர்.

இதில், இயக்குநர்கள் மரிசெல்வராஜ், மிஷ்கின் இருவரும் உதயநிதி பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பேசி கலகலப்பூட்டினர்.

உதயநிதியின் கழகத் தலைவன்

உதயநிதியின் கழகத் தலைவன்

அரசியலில் பிஸியாக வலம் வரும் உதயநிதி, தொடர்ச்சியாக படங்களிலும் நடித்து வருகிறார். நெஞ்சுக்கு நீதியை தொடர்ந்து இப்போது கழகத் தலைவன் படத்தில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி. இந்தப் படத்தில் உதயநிதியுடன் நிதி அகர்வால், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தடையறத் தாக்க, தடம், மகாமுனி என தரமான படங்களை கொடுத்துள்ள மகிழ் திருமேனி, கழகத் தலைவன் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆக்சனில் மிரட்டும் உதயநிதி

ஆக்சனில் மிரட்டும் உதயநிதி

மகிழ் திருமேனியின் படங்கள் எப்போதுமே ஆக்சனில் மிரட்டும். அதே போன்றே கழகத் தலைவன் பட ட்ரெய்லரும் செம்ம மாஸ்ஸாக உருவாகியுள்ளது. உதயநிதியின் முதல் ஆக்சன் பவர் பேக் மூவியாக இது இருக்கும் என ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள கழகத் தலைவன் படத்தில் உதயநிதியின் நடிப்புக்கு பெரிய ஸ்பேஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் நவம்பரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்

மாரி செல்வராஜ் பகிர்ந்த சுவாரஸ்யம்

கழகத் தலைவன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் மாரி செல்வராஜ், மிஷ்கின், சுந்தர் சி, அருண்ராஜா காமராஜ், பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய மாரி செல்வராஜ், 'மாமன்னன்' படத்தில் உதயநிதிக்கு காதல் காட்சிகளே கிடையாது, அவருக்கு வேண்டுமென்றே காதல் காட்சிகளை வைக்கவில்லை" எனக் கூறினார். மாரி செல்வராஜ் சொன்னதை கேட்ட உதயநிதி மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்தார். மேலும், "மாமன்னன் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களையும் உதயநிதி நன்றாக கவனித்துக் கொண்டார்" என பேசினார்.

சைக்கோ செகண்ட் பார்ட்

சைக்கோ செகண்ட் பார்ட்

மாரி செல்வராஜை தொடர்ந்து பேசிய மிஷ்கின், உதயநிதி அரசியலில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க மாட்டேன். ஆனால், அதற்கு பதிலாக விரைவில் உதயநிதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவேன் என உறுதியளித்தார். மிஷ்கினை தொடர்ந்து கழகத் தலைவன் பட இயக்குநர் மகிழ் திருமேனியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X