»   »  உதயநிதியின் 'இப்படை வெல்லும்' பட ரிலீஸ் தேதி!

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' பட ரிலீஸ் தேதி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி, மஞ்சிமா மோகன் இணைந்து நடித்துள்ள படம் 'இப்படை வெல்லும்'.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் 'இப்படை வெல்லும்' படம் சென்சார் செய்யப்பட்டு 'U/A' சர்டிஃபிகேட் வழங்கப்பட்டது.

இந்நிலையில் வருகிற 9-ம் தேதி 'இப்படை வெல்லும்' படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அடுத்த வாரம் பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

மெர்சலுக்கு பதிலாக

மெர்சலுக்கு பதிலாக

தீபாவளிக்கு மெர்சல் வெளியாகாது என்ற நிலை உருவானபோது இப்படை வெல்லும் படத்தை வெளியிடத் திட்டமிட்டனர். மெர்சல் திட்டமிட்டபடி வெளியானதால் தீபாவளிக்கு 'இப்படை வெல்லும்' படத்தை லைகா நிறுவனம் வெளியிடவில்லை.

நவம்பர் 9 ரிலீஸ்

நவம்பர் 9 ரிலீஸ்

இந்நிலையில் வருகிற 9-ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை படங்கள் வெளியிடப்பட்ட காலம்போய் கூடிய சீக்கிரமே வியாழக்கிழமை புதுப்படம் வெளியிடும் நாளாக மாறினாலும் ஆச்சர்யமில்லை.

வியாழக்கிழமை ரிலீஸ்

வியாழக்கிழமை ரிலீஸ்

சாய்பாபா பக்தரான ஏ.எம்.ரத்னம் தன்னுடைய படங்களை வியாழக்கிழமை வெளியிட ஆரம்பித்தார். அதைப் பார்த்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களை வியாழக்கிழமை வெளியிடத் தொடங்கினர். இந்த பட்டியலில் உதயநிதியின் படத்தையும் லைகா நிறுவனம் சேர்த்துவிட்டது.

செம போட்டி

செம போட்டி

சுசீந்திரன் இயக்கத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'நெஞ்சில் துணிவிருந்தால்' நவம்பர் 10-ம் தேதி வெளியாகவிருக்கிறது. அடுத்த வாரம் நிறைய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் 'இப்படை வெல்லும்' படத்தை ஒருநாள் முன்னதாக ரிலீஸ் செய்கின்றனர்.

English summary
Udhayanidhi and Manjima Mohan are playing the lead in the film 'Ippadai vellum', which is directed by Gaurav Narayanan. The film will be released on 9th of this month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil