நடிகர் சங்க கட்டிடத்தை சாக்காக வைத்து விஷால் திருமணம் செய்யாமல் ஏமாற்றுகிறார்...உதயநிதி கிண்டல்

சென்னை : நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள்.

விஷால் போலீசாக நடித்துள்ள இந்த படத்தில் சுனைனா, பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஷால் முருகானந்தம் என்ற கான்ஸ்டபிள் ரோலில், நீதிக்காக போராடுபவராக நடித்துள்ளார்.

லத்தி படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

நன்றி சொன்ன உதயநிதி

நன்றி சொன்ன உதயநிதி

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், லத்தி சார்ஜ் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. நான் நீண்ட காலமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால்,நீங்கள் இருவரும் சுலபமாக கால்ஷீட் வாங்கி விட்டீர்கள். சரியோ தவறோ நாங்கள் இதுவரை நட்பாக இருக்கிறோம்.

 ஒன்னா தான் ஸ்கூல், காலேஜ் போனோம்

ஒன்னா தான் ஸ்கூல், காலேஜ் போனோம்

நானும் விஷாலும் சேர்ந்து படம் பண்ண வேண்டியது. ஆனால், இது வரை நடக்கவில்லை. நானும் விஷாலும் பள்ளிக்கு ஒன்றாக சென்றோம்.கல்லூரிக்கு ஒன்றாக சென்றோம். அவ்வளவுதான் . அதற்கு மேல் சொல்ல முடியாது.பள்ளியில் யோசிக்கமால் பொய் சொல்வது நான் தான்.

 விஷால் எனக்கு நேர்மார்

விஷால் எனக்கு நேர்மார்

விஷால் இதற்கு முன்னதாக அசிஸ்டன்ட் கமிஷனர், கமிஷனர் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து தற்போது ப்ரோமோஷனில் கான்ஸ்டபிள் ஆகியுள்ளான்.நான் சமீபத்தில் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் சண்டை,பாட்டு என ஏதும் இருக்காது. நான் தேர்வு செய்யும் கதையில் சண்டை இருக்காது. ஆனால் விஷால் அதற்கு நேர்மாறாக இருப்பான்.

விஷால் அடிச்சுடுவாரோன்னு இருக்கு

விஷால் அடிச்சுடுவாரோன்னு இருக்கு

இந்த படத்தில் நடிக்கும் போது விஷாலுக்கு நிறைய அடிபட்டது என கேள்விப்பட்டேன். இவ்வளவு மெனக்கெடலுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை பார்த்தால் விஷால் திரையை விட்டு வெளியே வந்து அடித்து விடுவார் போல காட்சிகள் இருக்கிறது. அவ்வளவு ஆக்‌ஷன் காட்சிகள்.

நடிகர் சங்க கட்டிடத்தை வைத்து ஏமாற்றுகிறார்

நடிகர் சங்க கட்டிடத்தை வைத்து ஏமாற்றுகிறார்

அதே போல் நடிகர் சங்கம் கட்டிடத்தை விரைவில் கட்டவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். விஷால் அதை வைத்து தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நிச்சயம் அதை கட்டி முடிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் உதயநிதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X