»   »  ப்ரியா வாரியர் கெடக்கட்டும் 'டிடி'யின் இந்த காதலர் தின வீடியோவை பாருங்க

ப்ரியா வாரியர் கெடக்கட்டும் 'டிடி'யின் இந்த காதலர் தின வீடியோவை பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil
கவுதம் மேனனின் பாடலில் டிடி..!!

சென்னை: டிடி, டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள உலவிரவு பாடல் வீடியோ காதல் தினத்திற்கேற்ற பரிசாக அமைந்துள்ளது.

இயக்குனர் கவுதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் உலவிரவு பாடல் வீடியோவை தயாரித்துள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான டிடி, மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் காதலர்களாக நடித்துள்ளனர்.

இந்த உலவிரவு பாடல் வீடியோ காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது.

மென்மை

மென்மை

மதன் கார்க்கி எழுதிய உலவிரவு பாடலை கார்த்திக் பாடியுள்ளார். இந்த வீடியோவில் காதலை மிகவும் மென்மையாகவும், நேர்த்தியாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

டிடி

டிடி

உலவிரவு பாடல் வரிகள், இசை ஆகியவை அருமையாக உள்ளது. டிடியும், டொவினோ தாமஸும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். காட்சி அமைப்பு எளிமையாக, இனிமையாக உள்ளது. இளசுகள் இந்த பாடல் வீடியோவை ரிப்பீட் மோடில் போட்டுள்ளனர்.

டொவினோ

டொவினோ

மலையாள நடிகை ப்ரியா வாரியரின் ஒரு அடார் லவ் பட வீடியோவும் இன்று வெளியாகியிருந்தாலும் உலவிரவு வீடியோ கிளாசிக் என்று கூறும்படி அமைந்துள்ளது.

மகிழ்ச்சி

உலவிரவு வீடியோவுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. டிடியை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனால் கவுதம் மேனன், டிடி, டொவினோ உள்ளிட்ட உலவிரவு குழு மகிழ்ச்சியில் உள்ளது.

English summary
Director Gautham Menon's Ondraga originals has released a song video titled Ulaviravu as a Valentine's day gift to the fans. DD, Tovino Thomas starrer video is a perfect gift on a special day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil