29வது திருமண நாளை கொண்டாடிய பிரபல தம்பதிகள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ !

சென்னை : ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியினரின் 29வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இவர்கள் தங்களது திருமண நாளை ரசிகர்களோடு இணைந்து லைவ்வில் கலந்துரையாடியபடி கொண்டாடினர்.

இவர்களுக்கு ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

கோதாவரி

கோதாவரி

சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில், மறைந்த நடிகர் விசு தனது கம்பீரமான குரலில், கோதாவரி என்று அழைப்பார். எங்கு இந்த பெயரைக் கேட்டாலும் உடனே நம் நினைவுக்கு வருது உமாவின் தாய் கமலா காமேஷ்தான். 80களில் அம்மா கதாபாத்திரத்தில் மிகவும் அழகா நடித்து மனதை கவர்ந்தவர் கமலா காமேஷ்.

அன்பே சிவம் படத்தில்

அன்பே சிவம் படத்தில்

இவரின் மகள் தான் உமா, இவர் உலக நாயகன் கமஹாசன் நடிப்பில் வெளியான அன்பே சிவம் திரைப்படத்தில் மெகருனிசா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது அறிமுகத்தை கொடுத்தார். இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் அவர் அம்மாவைப் போலவே இருப்பார்.

மௌனகுரு

மௌனகுரு

அன்பே சிவம் திரைப்படத்தைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் அருள்நிதி, இனியா நடித்த மௌனகுரு திரைப்படத்தில் ஒரு நேர்மையான இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்காக விஜய் டிவி சிறந்த துணை நடிகைக்கான விருதை வழங்கி கௌரவித்தது.

குக் வித் கோமாளி சீசன்1

குக் வித் கோமாளி சீசன்1

இதையடுத்து, அம்புலி, மரியான், தூங்காவனம், பிரியாணி மகாமுனி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். நடனம், நடிப்பு என அனைத்திலும் ஆல் ரவுண்டரான உமா. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து விதவிதமான உணவுகளை சமைத்து அசத்தினார்.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

உமா ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் ஏராளமான சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். இந்த சேனலை தற்போது 1.5லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்க்ரைப் செய்து உள்ளனர். உமாவின் கணவர் அனைவருக்கும் மிகவும் பரிச்சீயமான ரியாஸ் கான். அதேபோல இவரின் மகனும் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிரபலமான நடிகர்

பிரபலமான நடிகர்

ரியாஸ்கான் பத்ரி, ஆளவந்தான், பாபா, வின்னர் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார். மேலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Recommended Video

நான் Simbhuவ KISS பண்ணல | Harshika Blasts on fake Gossip | Un Kadhal Irundhal
29வது திருமண நாள்

29வது திருமண நாள்

இந்நிலையில் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் தம்பதியினர் தங்களது 29வது திருமண நாளை சமீபத்தில் கொண்டாடினர். தங்களது திருமண நாளை ரசிகர்களோடு லைவ்வில் கலந்துரையாடிக் கொண்டே கொண்டாடினர். இந்த வீடியோவில் ரியாஸ் கான் உமாவுக்கு தாலி கட்டியும், குங்குமம் வைத்தும் உமாவிற்கு சர்ப்ரைஸ்கொடுத்து அசத்தினார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோக ட்ரெண்டாகி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X