For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மனித நேயத்திற்கான ஐநா விருது.. கடவுள் பணியை தொடருங்கள் சோனு என வாழ்த்திய பிரியங்கா சோப்ரா!

  |

  மும்பை: நிஜ சூப்பர் ஹீரோவாக இந்த கொரோனா காலத்தில் கலக்கிய இந்திய நடிகர் சோனு சூட்-க்கு மனித நேயத்திற்கான ஐநா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா பரவல் ஆரம்பித்த காலத்தில் நாடு முழுவதும் அதிரடியாக லாக்டவுன் போடப்பட்டது.

  லாக்டவுன் காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் பரிதவித்த ஆயிரக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் மகத்தான பணியை சோனு சூட் செய்தது பலரையும் நெகிழச் செய்தது.

  படத்துல வில்லன் நிஜத்துல ஹீரோ

  படத்துல வில்லன் நிஜத்துல ஹீரோ

  கோலிவுட், டோலிவுட், பாலிவுட் ஏன் ஜாக்கி சானுக்கே வில்லனாகவும் நடித்து அசத்தியவர் சோனு சூட். படத்துல வில்லனாக நடித்து வந்த சோனு சூட் நிஜத்துல ஹீரோவாகும், சூப்பர்மேனாகவும், மெசய்யாவாகவும் ஏன் கஷ்டப்படும் மக்களுக்கு ஓடோடி உதவி செய்யும் கடவுளாகவே பார்க்கப்பட்டார் சோனு சூட்.

  கந்தசாமி படத்தை போல

  கந்தசாமி படத்தை போல

  பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்ததும், நிறைய செஞ்சாச்சு போதும் என நினைக்காமல், தொடர்ந்து ஏழை எளிய மக்களின் துயர்களை துடைக்கும் வண்ணம் ஏகப்பட்ட உதவிகளை கந்தசாமி படத்தில் சியான் விக்ரம் செய்வது போல, ட்வீட் வந்தாலே உதவி வரும் என்ற ரீதியில் சோனு சூட் செய்ததை பலரும் பாராட்டினார்கள்.

  அதிகரித்த மக்கள் கோரிக்கை

  அதிகரித்த மக்கள் கோரிக்கை

  தினமும் தனக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ‘HELP' மெசேஜ்களின் பட்டியலை நடிகர் சோனு சூட் வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். "1137 மெயில்கள், 19000 ஃபேஸ்புக் மெசேஜ்கள், 4812 இன்ஸ்டாகிராம் மெசேஜ்கள், 6741 ட்விட்டர் மெசேஜ்கள்" வருவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

  மற்ற பிரபலங்களுக்கும் அழைப்பு

  மற்ற பிரபலங்களுக்கும் அழைப்பு

  இது போன்ற துயரமான காலக் கட்டத்திலும் நாம மட்டும் நல்லா இருக்கணும் என கம்ஃபோர்ட் ஜோனில் உள்ள பிரபலங்களை உங்கள் சொகுசு வாழ்க்கையை விட்டு சற்றே இறங்கி மக்களுக்கு உதவி செய்யுங்கள், நீங்கள் செய்யும் சிறு உதவியும் அவர்களுக்கு பெரும் பயனை தரும் எனவும் அழைப்பு விடுத்தார். ஆனால், யாருமே அதனை கண்டு கொள்ளவில்லை.

  ஐநா விருது

  ஐநா விருது

  மக்களுக்காக சுயநலமின்றி பாடுபட்ட நடிகர் சோனு சூட்-ஐ கெளரவப்படுத்தும் நோக்கில் ஐநாவின் United Nations Development Programme சார்பில் SDG அமைப்பு சிறந்த மனிதநேய செயற்பாட்டாளார் (Special Humanitarian Action) விருதை திங்களன்று விர்ச்சுவலாக அறிவித்துள்ளது. ஐநாவின் மனிதநேய விருது கிடைத்த நிலையில், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சோனு சூட்-ஐ வாழ்த்தி வருகின்றனர்.

  கடவுள் பணியை தொடருங்கள்

  கடவுள் பணியை தொடருங்கள்

  நடிகர் சோனு சூட்-க்கு ஐநா விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த நடிகை பிரியங்கா சோப்ரா, வாழ்த்துக்கள் சோனு சூட், இப்படியொரு விருது உங்களுக்கு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி, அதற்கு தாங்கள் தகுதியானவர். உங்கள் கடவுள் பணியை தொடருங்கள். நீங்கள் செய்த ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் நன்றி என பாராட்டி உள்ளார்.

  பிரியங்காவுக்கு நன்றி

  பிரியங்காவுக்கு நன்றி

  உங்களுடைய உற்சாகமூட்டும் இந்த வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி பிரியங்கா சோப்ரா. நீங்கள் மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு ரியல் இன்ஸ்பிரேஷன், இந்த உலகை தொடர்ந்து ஊக்கப்படுத்தி கொண்டே இருங்கள். நீங்களும் எங்களின் நிஜ ஹீரோ தான் என பிரியங்காவுக்கு சோனு சூட் நன்றி தெரிவித்துள்ளார்.

  யார் யாருக்கு

  யார் யாருக்கு

  இதற்கு முன்னதாக ஏஞ்சலினா ஜோலி, டேவிட் பெக்கம், லியனார்டோ டிகாப்ரியோ, எம்மா வாட்சன் மற்றும் லியம் நீசன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் சோனு சூட்-க்கு இப்படியொரு சர்வதேச அங்கீகாரம் அதுவும் ஐநாவிடம் இருந்து கிடைத்தது இந்தியர்களுக்கான பெருமை என்றே சொல்ல வேண்டும்.

  English summary
  Priyanka Chopra tweeted, “Congratulations SonuSood. So well deserved! You continue to do God’s work and it’s so inspiring to see. Thank you for all that you do.”
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X