twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலும் கற்று மற .. காதலிலும் கவனம் தேவை… காதலை ஸ்பெஷலாக சொல்லிய படங்கள்!

    |

    சென்னை : காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்கு அர்த்தம் என்னவென்று கேட்டால் அதற்கு பதில் சொல்வது கடினம். ஒருவரின் மனநிலையைப் பொறுத்தே காதலின் வெளிப்பாடு இருக்கும்.

    ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் ஒளிந்திருக்கும் அப்போது தான், அதை காதல் என்றே சொல்ல முடியும். அந்த பைத்தியக்காரத்தனத்தில் தான் அழகான காதலும் மறைந்து இருக்கும் அப்போது தான் அந்த காதல் மேலும் மேலும் அழகாகும் இது தான் காதலின் பார்முலா..

    காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்னும் போது அதில் ரொமான்ஸ் வந்து விடுகின்றது. இப்படியும் காதலிக்கலாமா, இப்படியும் காதலை சொல்லலாமா , காதலின் வலி இதுதானா என்பதை தமக்கு பெரும்பாலும் உணர்த்தியது திரைப்படங்களே. ஆனால், அந்த காதல் நம் வாழ்க்கையில் மெருகேற்ற வேண்டும் அதில் கவனம் தேவை என்பதை உணர்த்திய படங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

    இது தளர்வுதான், கோவிட் தொற்று முழுசா போயிடலை' கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடிகை தேவயானி!இது தளர்வுதான், கோவிட் தொற்று முழுசா போயிடலை' கொரோனா விழிப்புணர்வு படத்தில் நடிகை தேவயானி!

     படம் அல்ல பாடம்

    படம் அல்ல பாடம்

    இயக்குனர் சசீந்திரன் இயக்கத்தில் உருவான அற்புதமான காதல் கதை தான் "ஆதலால் காதல் செய்வீர்‘ இதை படம் என்பதை சொல்வதைவிட காதலர்களின் பாடம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். காதலன் காதலி இடையேயான காதல் ஒரு கட்டத்தில் எல்லை மீறி கருவுற்றலில் முடிகிறது. தெய்வீக காதலாக தொடங்கிய இவர்களது காதல், சாதி, இனம், அரசியல் பின்னனியால் காணாமல் போய் விடுகிறது.

     மனதில் தைக்கும் பதிவு

    மனதில் தைக்கும் பதிவு

    ஒரு கட்டத்தில் உதிர்ந்து அலுத்துப்போன காதலில் ஹீரோயினுக்கு வேறொருவனுடன் திருமணம், ஹீரோக்கு இன்னொரு பெண்ணுடன் காதல். இருவரின் எல்லை மீறிய காதலால் பிறந்த குழந்தையின் நிலை என்ன என்ற பெரிய கேள்வியை முன்வைத்து கனத்த இதயத்துடன் கதை முடிகிறது. உண்மைக்காதல் எதிர்பார்ப்பு அற்றது, உடல் மொழி பாராதது, அலுத்துப்போகாதது, பெற்றோரின் பேரங்களை எதிர்பாராதது, எதற்காகவும் காத்திருக்காது என்ற எதார்த்தத்தை பின்னுக்கு தள்ளி காதல் எளிதில் கடந்து போகக்கூடியது என்பதை மனதில் தைக்கும் பதிவு தான் இந்த படம்.

     போங்கடா நீங்களும் உங்க காதலும்

    போங்கடா நீங்களும் உங்க காதலும்

    முதிர்ச்சியற்ற காதலால் பெற்ற குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் தூக்கி எறிந்து விட்டு, அந்த ஜோடி அடுத்த வேலைகளை பார்க்க சென்று விடுகிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் அந்த குழந்தையின் அழுகுரலில் " ஆராரோ பாட இங்கு தாயுமில்லை உனை அள்ளி செல்ல கொஞ்ச யாருமில்லை" என்ற பாடல் வரி மனதை பிசைந்து கண்ணீரை வரவைத்து, போங்கடா நீங்களும் உங்க காதலும் என்று சொல்லத்தான் தோன்றுகிறது.

     வழக்கமான காதல் கதை

    வழக்கமான காதல் கதை

    ராட்டினம் அரைத்த மாவை அரைத்தக்கதைத்தான் என்றாலும் இப்படத்தின் க்ளைமாக்ஸ் சற்று ஆழமானதாக இருந்தது தான் படத்தின் ஹை லைட். வழக்கமான காதல், பெரிய வீட்டு பெண்ணை காதலிக்கும் இளைஞன், காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரிய வர, நண்பர்கள் உதவியுடன் திருட்டுத் திருமணம் இப்படி வழக்கமாக நாம் பார்த்து அலுத்துப்போன காதல் கதை தான் ராட்டினம். காதல் படத்தின் இறுதியில் பரத் லூசு ஆகுறாரு, இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நாம லூசு ஆகுறோம் அவ்வளவுதான் வித்தியாசம்.

     வெவ்வேறு திருமணம்

    வெவ்வேறு திருமணம்

    திருட்டு கல்யாணம் பெண் வீட்டுக்கு தெரிய வர ஹீரோவின் அண்ணன் கொல்லப்படுகிறார். இறுதியில் ஹீரோயினின் தாலியை கழட்டி எறிவதில் கதை முடிகிறது. படத்தின் முக்கிய பலமே அந்த க்ளைமாக்ஸ் காட்சிதான் சுற்றித் சுற்றி திரிந்த காதல் ஆறு மாதத்தில் காணாமல் போய், இருவருக்கும் வெவ்வேறு திருமணம், மகிழ்ச்சியான வாழ்க்கை இதற்கா இந்த அக்கப்போரு? என்று சொல்ல தோன்றுகிறது.

     காதலுக்காக

    காதலுக்காக

    இவர்களின், ஆத்மார்த்தமான காதலில் மிச்சம் என்னவென்றால் ஹீரோவின் அண்ணன் கொலை, அண்ணி விதவை, அப்பா இல்லாத குழந்தை என்ற முக்கோணத்தில் கதை முடிகிறது. இவ்வளவே தான் காதல் என்ற எதார்த்தத்தை பளிச்சென்று கூறியுள்ளது ராட்டினம். நாம் பார்த்து அல்லது அனுபவித்த வலியை திரையில் பார்க்கும் போது மனதில் இனம் புரியாத ஒர் உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது. காதலுக்காக எதையும் இழக்கலாம், காதல் என்ற போர்வையில் வருகிற உணர்வுக்காக பாச உறவுகளை, நிம்மதியை இழக்க வேண்டாம் என்ற எதார்த்தத்தை அழகாக காட்சிகளின் மூலம் இப்படம் உணர்த்தி இருக்கும்.

     காதலில் கவனம் தேவை

    காதலில் கவனம் தேவை

    உன் குறை நிறைகளை மறந்து உன்னைப்பிடிக்கும் என்பதில் தொலைகிறது காதல். அருகிலிருந்தாலும் தொலைவிலிருந்தாலும் அன்பு மாறாது. எத்தனை ஆண்டுகள் கழித்தாலும் இதே வார்த்தையில் ஏதோ ஒரு புள்ளியில் நினைத்துக்கொள்வதே காதலின் பலம். காதலும் கற்று மற .. காதலிலும் கவனம் தேவை என்பதை இந்த திரைப்படங்கள் நமக்கு உணர்த்திய பாடம்.

    English summary
    Unconventional Love Movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X