twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோல்வியே காணாத கமலின் ’வி’ தலைப்பு படங்கள்..அட விக்ரம் டைட்டிலுக்கு பின் இத்தனை சுவாரஸ்யமா?

    |

    சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் படம் நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 4 மணிக்கே முதல் நாள் முதல் காட்சியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

    கமல் ஹாசன் தனி ஹீரோ என்கிற நிலையை தாண்டி மற்ற ஹீரோக்களுடன் இணையும் வகையில் விக்ரம் படம் அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    கமல்ஹாசன் படங்களிலேயே அதிக வசூலை அள்ளிக்குவிக்கும் படமாக விக்ரம் இருக்கலாம் என்ற தகவலும் பரவலாக உள்ளது.
    விக்ரம் 1986

    நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் விக்ரம் 1986 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. கமல் ஹாசன் புகழின் உச்சியில் இருந்த நேரம் அதற்கு மகுடம் வைத்தாற்போல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விக்ரம் படம் வெளியானது.

    ரசிகர்களோடு ரசிகராக.. விக்ரம் முதல் காட்சியைப் பார்க்கும் கமல்.. எந்த தியேட்டரில் தெரியுமா?ரசிகர்களோடு ரசிகராக.. விக்ரம் முதல் காட்சியைப் பார்க்கும் கமல்.. எந்த தியேட்டரில் தெரியுமா?

     1986 - ல் புதுமைகளுடன் வெளியான விக்ரம்

    1986 - ல் புதுமைகளுடன் வெளியான விக்ரம்

    விக்ரம் படம் வெளியான காலக்கட்டத்தில் இல்லாத பல அம்சங்களுடன் அப்படம் இருந்தது. நவீன தொழில் நுட்பம், நவீன விஷயத்தை அணுகும் திரைக்கதை, பாடல்கள், கதையை வாரப்பத்திரிக்கையில் முன்கூட்டியே படங்களுடன் வெளியிட்டது என பல விஷயங்கள் இருந்தது.

     விக்ரம் 2022 எதிர்பார்ப்புகள் அதிகம்

    விக்ரம் 2022 எதிர்பார்ப்புகள் அதிகம்

    தற்போது 2022 ஆம் ஆண்டு வெளியாகும் கமலின் விக்ரம் படம், கமல் படங்களில் அதிக வசூல் படமாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்கிற நிலையில் கமல்ஹாசனுக்கும் வி என்கிற பெயரில் கமல் நடித்த படங்களின் வெற்றியையும் பார்க்கும்போது புது தகவலாக உள்ளதே என தோன்றுகிறது.

     எம்ஜிஆருக்கு த, சிவாஜிக்கு பா, கமலுக்கு வி?

    எம்ஜிஆருக்கு த, சிவாஜிக்கு பா, கமலுக்கு வி?

    த வரிசைப்படங்கள் எம்ஜிஆருக்கும், பா வரிசைப்படங்கள் சிவாஜிக்கும் வெற்றியைத்தேடி தந்தது போல் வி வரிசைப்படங்கள் கமல்ஹாசனுக்கு வெற்றியைத் தேடித்தந்துள்ளது. கமல்ஹாசன் வி எனும் எழுத்தில் ஆரம்பிக்கும் டைட்டிலில் நடித்த படங்கள் பெருவெற்றியை பெற்றுத்தந்தது என்பதற்கு பல படங்களை உதாரணமாக சொல்லலாம். கமல் சொந்தப்படங்களும் பெரும்பாலும் வி-யில் ஆரம்பிக்கும் வகையில் இருந்துள்ளது.

     வி முதல் எழுத்தில் ஆரம்பித்த வெற்றிப்படங்கள்

    வி முதல் எழுத்தில் ஆரம்பித்த வெற்றிப்படங்கள்

    கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த 80 ஆம் ஆண்டுகளில் பல வெற்றிப்படங்களைத்தந்தார். அதில் சில்வர் ஜூப்ளி படங்களும் உண்டு. வானம்பாடி (1963-குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படம்), வறுமையின் நிறம் சிவப்பு(1980), வாழ்வே மாயம் (1982), விக்ரம் 1986- ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், விரதம் (1987- விருதம் மலையாளப்படத்தின் தமிழ் தழுவல் திரைப்படம்), வெற்றி விழா (1987), விருமாண்டி (2004) வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்(2004), வேட்டையாடு விளையாடு (2006), விஸ்வரூபம் (2013), விஸ்வரூபம் 2 (2018), விக்ரம் (2022)

     கடைசி பட டைட்டிலும் வி தான்

    கடைசி பட டைட்டிலும் வி தான்

    இதில் விரதம் படத்தைத்தவிர எந்தப்படமும் சோடை போனதில்லை. விக்ரம், வாழ்வே மாயம், வெற்றிவிழா உள்ளிட்ட பல படங்கள் பெருவெற்றியை பெற்றத்தந்தன. இதில் கமல் கடைசியாக நடித்து வெளிவந்த விஸ்வரூபம் 2 படமும் வி-யில் தான் ஆரம்பிக்கிறது என்பது சுவாரஸ்யமான ஒற்றுமை.

    English summary
    Actor Kamal Haasan's Vikram movie will be released tomorrow. The title films of he started in ‘V’ ran well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X