»   »  2014ன் மறக்க முடியாத படங்கள்... ஒரு விமர்சகனின் பார்வையில்!

2014ன் மறக்க முடியாத படங்கள்... ஒரு விமர்சகனின் பார்வையில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு அதிகபட்சமாக 215 படங்கள் வெளியாகி சாதனைப் படைத்தது. இவற்றில் பத்துப் படங்கள் நூறு நாட்கள் கொண்டாடின.

நூறு நாட்களைக் கொண்டாடாவிட்டாலும், பாராட்டுகளையும் போட்ட முதல் பணத்தையும் எடுத்த படங்கள் என்று பார்த்தால் இருபதாவது தேறும்.

அவற்றில் சிறந்த பத்து படங்களை இங்கே தொகுத்துள்ளோம்.

1. மெட்ராஸ்

1. மெட்ராஸ்

பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி - கேதரைன் தெரசா நடித்த இந்தப் படம் வட சென்னை மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தது. பாராட்டுகள் மட்டுமல்ல, வசூலிலும் சோடை போகவில்லை.

2 கோலி சோடா

2 கோலி சோடா

சின்ன முதலீடு, பெரிய வெற்றி என்று பாராட்டப்பட்ட படம் இது. விஜய் மில்டன் இயக்கியிருந்தார். பசங்க படத்தில் நடித்த சிறுவர்கள் வளர்ந்த பிறகு எடுத்த படம்.

3 ஜீவா

3 ஜீவா

சுசீந்திரனின் துணிச்சலான முயற்சி இந்தப் படம். நாங்கள் உயர்சாதி, கிரிக்கெட் வாய்ப்பெல்லாம் எங்களுக்கு மட்டும்தான் என மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் கழிசடைகளின் முகத்திரையைக் கிழித்த படம்.

4. சதுரங்க வேட்டை

4. சதுரங்க வேட்டை

சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நூதன மோசடிகளில் குதிக்கும் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வுப் படம் இது. சுவாரஸ்யமான படம். வணிக ரீதியில் நன்றாகவும் போனது. வினோத் இயக்கியிருந்தார்.

5. ஜிகிர்தண்டா

5. ஜிகிர்தண்டா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இன்னொரு சுவாரஸ்யமான படம் ஜிகிர்தண்டா. வெற்றிப் படமும் கூட.

6. தெகிடி

6. தெகிடி

இதுவும் வணிக மோசடிகள் பற்றி எடுக்கப்பட்ட ஒரு நல்ல படம். ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருந்தார். வணிக ரீதியிலும் நல்ல பலனை ஈட்டித் தந்தது.

7. முண்டாசுப்பட்டி

7. முண்டாசுப்பட்டி

இந்த ஆண்டில் வந்த முக்கிய படங்களில் ஒன்று என்ற தகுதி முண்டாசுப்பட்டிக்கு உண்டு. ராம் என்பவர் இயக்குநராக அறிமுகமான இந்தப் படத்தில் விஷ்ணு, நந்திதா நடித்திருந்தனர்.

8. கதை திரைக்கதை வசனம் இயக்கம்

8. கதை திரைக்கதை வசனம் இயக்கம்

ஆர் பார்த்திபன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் அவருக்கு பெரும் திருப்புமுனையைத் தந்தது. கதை சொன்ன விதம், காட்சிகளை உருவாக்கிய விதம் என அனைத்திலுமே பார்த்திபன் கலக்கியிருந்தார்.

9. அரிமா நம்பி

9. அரிமா நம்பி

விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் நடிக்க, ஆனந்த் சங்கர் இயக்கிய இந்தப் படம் 2014ம் ஆண்டின் கவனிக்கத்தக்க படமாக அமைந்தது.

10. யாமிருக்க பயமே

10. யாமிருக்க பயமே

எதிர்பாராத வெற்றியைப் பெற்ற படங்களில் இந்த யாமிருக்க பயமேவும் ஒன்று. பேய் ப்ளஸ் காமெடி கலந்த சுவாரஸ்ய படமாக வந்து வெற்றியைப் பெற்றது. ட

English summary
Here is the list of important Tamil movies released in the year 2014.
Please Wait while comments are loading...