»   »  நேத்து ராத்திரியை மறக்கவே முடியாது: சிவா போன்று ஃபீல் பண்ண துல்கர் சல்மான்

நேத்து ராத்திரியை மறக்கவே முடியாது: சிவா போன்று ஃபீல் பண்ண துல்கர் சல்மான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை வாங்கிய இரவு தன்னால் மறக்க முடியாத இரவு என மலையாள நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

சினிமா கலைஞர்களுக்கான கேரள அரசு விருது வழங்கும் விழா பாலக்காட்டில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் கேரள மாநில முதல்வர் பினரயி விஜயன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

விழாவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன.

துல்கர்

துல்கர்

மார்ட்டின் பிரக்காட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சார்லி படத்தில் சிறப்பாக நடித்ததால் சிறந்த நடிகருக்கான விருது துல்கர் சல்மானுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது சார்லி படத்திற்காக பார்வதி நாயருக்கு கிடைத்தது.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

விருதை பெற்ற துல்கர் ஃபேஸ்புக்கில் இமோஷனலாக போஸ்ட் போட்டுள்ளார். அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நேற்று இரவு மறக்க முடியாத இரவு. என் வாழ்வின் மகிப் பெரிய மற்றும் மிகவும் ஸ்பெஷலான விருது என தெரிவித்துள்ளார்.

விருது

விருது

என் வீட்டில் பல விருதுகள், சான்றிதழ்களை பார்த்து வளர்ந்த எனக்கு இது வானில் இருக்கும் நட்சத்திரங்கள் போன்று தூரமாக தெரிந்தது. அந்த உயரத்திற்கு நான் வர மாட்டேனோ என்று இருந்தது என துல்கர் ஃபீல் பண்ணியுள்ளார்.

முதல்வர்

முதல்வர்

பல ஆண்டுகள் கழித்து ஒரு பவுர்ணமி இரவில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதை முதல்வர் வழங்கியபோது தங்க நட்சத்திரம் என் கையில் வந்து விழுந்தது. ரசிகர்கள், நடுவர்கள், சார்லி படக்குழுவினருக்கு நன்றி என துல்கர் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளார்.

English summary
Dulquer Salman has got the best actor award at the 46th Kerala State Film Awards function held at the Indira Gandhi Stadium in Palakkad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil