»   »  போன் வயரு பிஞ்சு ஒரு வாரமாச்சு.. இதுதான் பசி நாராயணன்!

போன் வயரு பிஞ்சு ஒரு வாரமாச்சு.. இதுதான் பசி நாராயணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த நடிகர் பசி நாராயணன் ஏராளமான படங்களில் நடித்தவர். அவர் நடித்த வேடங்கள் சின்னச் சின்னதாக இருந்தாலும் அத்தனையும் மக்கள் மனதில் ஆழப் பதிந்து போனவை.

குறிப்பாக அவர் பேசிய 'போன் வயரு பிஞ்சு போயி ஒரு வாரமாச்சு' என்ற வசனத்தை யாரால் மறக்க முடியும்.. அரசியலில் இதெல்லாம் சாதாரணப்பா என்று கூடவே கவுண்டமணி வைத்து பன்ச்சும் மறக்க முடியாத வசனங்கள். சூரியன் படத்தின் மிகப் பெரிய பலமே இவர்களின் காமெடி கலாட்டாதான்.

கவுண்டமணி ஒரு பக்கம் பீலா விட்டுக் கலக்க.. ஒமக்குச்சி மறுபக்கம் தன் பங்குக்கு பட்டையைக் கிளப்ப.. தனக்கே உரிய முக பாவனையுடன் பசி நாராயணன் காட்டிய அந்த விதம் விதான முக பாவங்கள், கடைசியில் சொல்லும் அந்த போன் வயர் பிஞ்சு ஒரு வாரமாச்சு வசனமும்.. அசத்தோ அசத்தல்.. இன்று வரை தமிழ் சினிமாவின் அட்டகாசமான காமெடிக் காட்சிகளில் இதுவும் இடம் பெற்றிருப்பதே இதன் சிறப்புக்கு ஒரு உதாரணம்.

English summary
No one can forget late actor Pasi Narayanan and his famous dialogue "Phone vayaru pinchu oru varamachu".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil