twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தற்காப்பு கலையின் நாயகன்..புரூஸ் லீ பற்றி தெரியாத தகவல்!

    |

    சென்னை : ஆங்கிலப் படங்களில், கராத்தே, குங்பூ போன்ற சீனத் தற்காப்பு கலைகளை அறிமுகப்படுத்திய சாகச நாயகன் புரூஸ் லீ மறைந்த தினம் இன்று.

    1940 இல் பிறந்து, 1973 இல் மர்மமான முறையில் மரணமடைந்த தற்காப்புக்கலை கலைஞன். ஒருசில திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ் பெற முடியும் என்று உலகுக்கு காட்டியவர். இளைஞர்களிடம் தற்காப்புகலை குறித்தும், உடற்பயிற்சியின் தேவை குறித்தும், உடலை கட்டுக்கோப்பாக பேணுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.

    புரூஸ் லீயின் திரைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய கதைகள் வழியாக உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் தற்காப்புக்கலையை கற்க ஆரம்பித்தனர். இன்றளவும் தெருவுக்கு தெரு செயல்படும் கராத்தே, குங்ஃபூ பள்ளிகளுக்கு வித்திட்டவர் புரூஸ் லீ.

    ஆரம்பிச்சிடாங்கப்பா...ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?...வீடியோவால் தீயாய் பரவும் தகவல் ஆரம்பிச்சிடாங்கப்பா...ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா?...வீடியோவால் தீயாய் பரவும் தகவல்

    புரூஸ் லீ

    புரூஸ் லீ

    புரூஸ் லீ இந்த பெயரை நம் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கடந்து வந்து இருப்போம். பள்ளி பருவத்தில், கல்லூரி காலத்தில்,நண்பர்கள் பேசும் போதும், சண்டையிடும் தருணத்தில் மனசுக்குள் புரூஸ் லீனு நினைப்பா என்று கேட்டு கிண்டலடித்து லாபித்து இருப்போம். புரூஸ் லீயை யாராலும் சண்டையிட்டு ஜெயிக்க முடியாது, அவரது உடம்பு இரும்புக்கு ஒப்பானது அதில் கத்தியை கொண்டு தாக்கினாலும் கத்தி இறங்காது.

    தற்காப்பு கலை

    தற்காப்பு கலை

    அமெரிக்காவின் சான்பிரன்ஸிஸ்கோ நகரில் 1940ம் ஆண்டு சீன தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் புரூஸ் லீ. இவரது தந்தை ஒரு நாடக நடிகராக இருந்தால் குழந்தையாக இருக்கும் போதே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இளம் வயதில் கராத்தே, குங்பூ கற்றுத்தேர்ந்த புரூஸ் லீ, அவற்றை இணைத்து ஒரு விதமான தற்காப்பு கலை ஒன்றை உருவாக்கினார்.

    தீவிர பயிற்சி

    தீவிர பயிற்சி

    உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற லீ அங்கு ஒரு உணவகத்தில் பணியாற்றிக் கொண்டு நாடக கலையும் பயின்றார். பின்னர், முழு நேர குங்பூ பயிற்சியாளராக மாறினார். தீவிர பயிற்சி மூலம் உடலை வலிமையாக்குவது உடலை வளைப்பது ஆகியவற்றில் நிபுணரானார். 1967ல் கராத்தே சாப்பியன் நிக் மூரேவை கராத்தே போட்டியில் வென்றார்.

    உயிரிழந்தார்

    உயிரிழந்தார்

    தொலைக்காட்சிகளில் நடித்து வந்த புரூஸ் லீ, தி பிக் பாஸ் என்ற ஹாங்காங் படத்தில் சாகச நாயகனாக நடித்து சூப்பர் ஸ்டார் ஆனார். குங்பூ வீரராக அடுத்தடுத்த படங்களில் நடித்த புரூஸ் லீ இறுதியாக எண்டர் தி டிராகன் படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். ஆனால், படம் வெளியாவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே தனது 32வது வயதில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

    சாதனையை உலகம் இன்றும் பேசும்

    சாதனையை உலகம் இன்றும் பேசும்

    புரூஸ் லீ ஹாலிவுட் சினிமாவில் நடித்த முதல் சீனர் ஆவார். பல உலக சாதனைகளை படைத்த புரூஸ் லீயின் சாதனையை முறியடிக்க இதுவரை யாரும் வரவில்லை என்பதுதான் உண்மை. 45 கிலோ மணல் மூட்டையை ஒரே கிக்கில் உடைக்கும் திறமை இவரிடம் மட்டும் தான் உள்ளது. ஒரே சமயத்தில் 1500 தண்டாலும், ஒரு கையில் 400 தண்டால், கை கட்டை விரலில் 10 தண்டாலும் எடுக்கும் அசாத்திய இரும்பு மனிதன் மறைந்து பல ஆண்டுகாலம் ஆனாலும் அவரின் சாதனையை உலகம் இன்றும் பேசுகிறது.

    English summary
    Bruce Lee, known as the master of martial arts, was an actor, director, and martial artist, whose man fell almost an inch before the punch could reach.Unknown information about Bruce Lee
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X