»   »  கஞ்சா கருப்பு மாதிரி இல்லாமல் பரணி...: அப்போ அது உண்மையாக இருக்குமோ?

கஞ்சா கருப்பு மாதிரி இல்லாமல் பரணி...: அப்போ அது உண்மையாக இருக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார் பரணி.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பரணி ஜூலிக்கு ஆதரவாக இருந்தார். அது தான் அவர் செய்த குற்றம் போல. அதன் பிறகு ஆளாளுக்கு பரணியை டார்கெட் செய்தார்கள்.

அவரை கிட்டத்தட்ட பைத்தியம் போன்று ஆக்கிவிட்டனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களின் கொடுமையை தாங்க முடியாமல் தப்பியோட முயன்ற பரணி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து மீண்டும் ஜூலியை குறி வைக்கிறார்கள் போட்டியாளர்கள்.

பரணி

பரணி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டாலும் தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார் கஞ்சா கருப்பு. அவரை போன்று இல்லாமல் பரணியை அவரின் வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளனர். கஞ்சா கருப்பு ரீ-என்ட்ரி கொடுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கோவில்

கோவில்

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகிழ்ச்சியில் பரணி தனது குடும்பத்தாருடன் கோவிலுக்கு சென்று சாமிக்கு நன்றி சொல்லியுள்ளார். அவரை பார்த்த சந்தோஷத்தில் உள்ளனர் அவரது குடும்பத்தார்.

முடியாது

முடியாது

மக்கள் எனக்கு அளித்த ஆதரவை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதால் பிக் பாஸ் பற்றி 100 நாட்களுக்கு எதுவும் பேச முடியாது என்றார் பரணி.

English summary
Bharani has gone home after he got kicked out of Big Boss house but Ganja Karuppu is staying in a room provided by Big Boss organisers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil