அதுக்கு என் அந்தரங்க பாகங்கள் தெரியணும்.. பாஜக தலைவர் புகாருக்கு.. டிவி நடிகை திமிரான பதிலடி!
மும்பை: பிக் பாஸ் பிரபலமும் டிவி நடிகையுமான உர்ஃபி ஜாவேத் மேலாடை இன்றி வீடியோக்கள் வெளியிட்டது மட்டுமின்றி வெளியேவும் சுற்ற ஆரம்பித்த நிலையில், அவருக்கு எதிராக மகாராஷ்ட்ராவை சேர்ந்த பாஜக தலைவர் சித்ரா வாக் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று நடிகை உர்ஃபி ஜாவேத்தை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்த நிலையில், அதற்கு பதிலடி போஸ்ட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் உர்ஃபி ஜாவேத்.
இளம் டிவி நடிகையான உர்ஃபி ஜாவேத் எல்லை மீறிய கவர்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து சம்பாதித்து வருகிறார்.
சமீபத்தில் துபாயில் அவர் கைது செய்யப்பட்டதாக கிளம்பிய தகவல்களை மறுத்த நிலையில், சித்ரா வாக் புத்தாண்டை முன்னிட்டு கொடுத்த புகாருக்கும் பதில் போஸ்ட் போட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.

டாப்லெஸ்ஸாக வெளியேவும்
மேலாடையின்றி தீபாவளி, நியூ இயர் என பண்டிகை நாட்களுக்கு வீடியோ போட்டு வந்த உர்ஃபி ஜாவேத். சில தினங்களுக்கு முன்னதாக டாப்லெஸ் ஆக டின்னர் டேட்டிங் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அப்போது கூட தனது மார்பகங்கள் தெரியாத வண்ணம் ஆபரணங்களை அவர் அணிந்திருந்தார்.

இளைஞர்களை சீரழிக்கிறார்
உர்ஃபி ஜாவேத் எல்லை மீறி ஆபாசமாக போஸ்ட்டுகள் போட்டு வருவது இளைஞர்களை சீரழித்து வருவதாக் பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் சமீபத்தில் பேசிய நிலையில், நீங்க மட்டும் என்ன ஒழுக்கமா எனக் கேட்டு 2018ல் மீடூ புகார்கள் கொழுந்து விட்டு எரிந்த போது சேத்தன் பகத் நடிகைகளுக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ்களை ஃபார்வேர்ட் செய்து அவரது வாயை அடைத்து விட்டார்.

பாஜக தலைவர் புகார்
இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நடிகை உர்ஃபி ஜாவேத் பொதுவெளியிலும் அரை நிர்வானமாக ஆடை அணியாமல் சுற்றித் திரிகிறார். அவரை கைது செய்யுங்க என மகாராஷ்ட்ரா பாஜக தலைவர் சித்ரா வாக் மும்பை போலீஸ் கமிஷனரையே நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.

என்னை கைது செய்ய முடியாது
இந்த புத்தாண்டை இன்னொரு போலீஸ் புகாருடன் தொடங்குகிறேன். ஏற்கனவே ஒரு அரசியல்வாதி என்மீது இப்படியொரு புகார் அளித்து வீணாகி போன நிலையில், மறுபடியும் ஒரு அரசியல்வாதி தனது அரசியல் பலத்தை வைத்து என்னை அடக்கலாம் என நினைக்கிறார். ஆனால், அவருக்கு தெரியவில்லை சட்டப்படி என்னை கைது செய்ய முடியாது என பதிலடி கொடுத்துள்ளார்.

அந்தரங்க பாகங்கள் தெரிந்தால்
நிர்வாணம் மற்றும் ஆபாசம் ஒருத்தர் ஒருத்தர் பார்வைக்கு ஏற்றவாறு மாறும். என் மார்பகமோ அல்லது பெண் உறுப்போ தெரியாத வரை என்னை உங்களால் சிறையில் அடைக்க முடியாது. மீடியா அட்டென்ஷனுக்காக மட்டுமே இந்த நபர் இப்படியொரு புகாரை என் மீது கொடுத்துள்ளார் என செம திமீராக பதில் அளித்துள்ளார் உர்ஃபி ஜாவேத்.

அதை தடுங்க முதல்ல
மும்பையில் ஏகப்பட்ட போதைப் பொருள் புழக்கம், பாலியல் தொல்லை புகார்கள், அனுமதியின்றி நடத்தப்படும் ஆபாச நடன பார்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஒரு அரசியல்வாதியாக அதையெல்லாம் நீங்கள் முதலில் தடுக்கலாமே என்றும் அட்வைஸ் சொல்லி இருக்கிறார் உர்ஃபி ஜாவேத்.


Click it and Unblock the Notifications











