»   »  கட்சி துவங்கும் சீனியர் ஹீரோ, நடிக்க வரும் செல்ல மகள் ஐஸ்வர்யா

கட்சி துவங்கும் சீனியர் ஹீரோ, நடிக்க வரும் செல்ல மகள் ஐஸ்வர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் உபேந்திராவின் மகள் ஐஸ்வர்யா நடிக்க வந்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் உபேந்திரா. கர்நாடகாவில் உபேந்திராவுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் அவர் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளார்.

தனிக்கட்சி துவங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அரசியல்

அரசியல்

உபேந்திரா அரசியலுக்கு வருவதாக அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

உபேந்திராவின் மகள் ஐஸ்வர்யா ஹவ்ரா ப்ரிட்ஜ் கன்னட படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் உபேந்திராவின் மனைவி ப்ரியங்காவும் நடிக்கிறார்.

ப்ரியங்கா

ப்ரியங்கா

ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தந்தை இல்லாமல் ஒரு தாய் எப்படி மகளை வளர்க்க பாடுபடுகிறார் என்பதே கதையாம்.

மகள்

மகள்

ஹவ்ரா ப்ரிட்ஜ் படத்தில் ப்ரியங்காவின் மகளாக நிஜ மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தின் கதை தான் ஹீரோவாம். இந்த படம் கன்னடம் மற்றும் தமிழில் ரிலீஸாக உள்ளது.

English summary
Kannada actor Upendra's daughter Aishwarya is making her debut as child artist in her mother Priyanka starrer Howrah Bridge.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil