twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப் மெகா ஹிட்டால் அதே ரூட்டில் களமிறங்கும் ஹீரோக்கள்... மெகா பட்ஜெட்டில் இன்னொரு படம்

    By
    |

    சென்னை: கேஜிஎஃப் படம் ஹிட்டானதை அடுத்து, அதே ஸ்டைலில், பல மொழிகளில் உருவாகும் படம் அதிகரித்து வருகிறது.

    யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான படம், கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இந்த கன்னட படம், தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில், டப் செய்யப்பட்டு வெளியிட்டப்பட்டது.

    கன்னடத்தில் அதிக செலவில் உருவான படமும் இதுதான். அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக் குவித்த இந்தப் படம், கன்னட சினிமாவில் ரூ.100 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.

    கேஜிஎஃப் 2ம் பாகம்

    கேஜிஎஃப் 2ம் பாகம்

    இதைத் தொடர்ந்து கேஜிஎஃப் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்று தெரிகிறது.

    மெகா பட்ஜெட்

    மெகா பட்ஜெட்

    இதற்கிடையில், கன்னடத்தில் கேஜிஎஃப் பார்முலாவை பின்பற்றி மெகா பட்ஜெட்டில் படங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இப்போது பிரபல நடிகர் உபேந்திராவும் இந்த பார்முலாவில் இறங்கியுள்ளார். இவர் தமிழில் விஷால் நடித்த சத்யம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

    கப்ஸா

    கப்ஸா

    இவர் இப்போது கப்ஸா (Kabza) என்ற படத்தில் நடிக்கிறார். ரூ.50 கோடியில் உருவாகும் இந்தப் படத்தை சந்துரு இயக்குகிறார். பிரபல தாதா கதையான இதில், பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு, நானா படேகர், பிரதீப் ராவத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    தாதா உபேந்திரா

    தாதா உபேந்திரா

    படம் பற்றி இயக்குனர் சந்துரு கூறும்போது, இதில் பிரபல தாதாவாக நடிக்கிறார் உபேந்திரா. இதற்காக தாதாக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்து கதையை உருவாக்கி இருக்கிறோம். 80-களில் நடக்கும் கதையான இந்த படம், கன்னடம், தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட 7 மொழிகளில் உருவாகிறது என்றார். இதன் தொடக்க பெங்களூரில் நேற்று நடந்தது.

    English summary
    actor Upendra’s big budget multilingual film Kabza was officially launched on Saturday. Tipped to be the next pan-Indian film from Kannada industry after KGF, it will be released in seven languages
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X