»   »  அஜீத் ஹீரோயினுக்கு 'அரிய' பிறந்தநாள் பரிசு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார்

அஜீத் ஹீரோயினுக்கு 'அரிய' பிறந்தநாள் பரிசு கொடுத்த கன்னட சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நடிகை பிரியங்காவுக்கு அவரது கணவரான கன்னட நடிகர் உபேந்திரா புதிய 2000 ரூபாய் நோட்டை பிறந்தநாள் பரிசாக அளித்துள்ளார்.

கொல்கத்தாவை சேர்ந்தவர் நடிகை பிரியங்கா த்ரிவேதி. தமிழில் ராஜ்ஜியம், அஜீத்தின் ராஜா, விக்ரமின் காதல் சடுகுடு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கன்னட நடிகர் உபேந்திராவை காதலித்து மணந்து பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

உபேந்திரா, பிரியங்கா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

பிரியங்கா கடந்த 9ம் தேதி தனது 39வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி உபேந்திரா பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தார். பார்ட்டியில் கன்னட திரையுலகினர் கலந்து கொண்டனர்.

பரிசு

பரிசு

பார்ட்டிக்கு வந்திருந்த அனைவரையும் தன்னை பார்க்குமாறு கூறி தனது மனைவிக்கு பரிசு கொடுத்தார் உபேந்திரா. பிரியங்கா உபேந்திரா அளித்த கவரை பிரித்து பார்த்தபோது அதில் புதிய 2000 ரூபாய் நோட்டு இருந்தது.

உபேந்திரா

உபேந்திரா

வரிசையில் நிற்காமல் உனக்கு புதிய 2000 ரூபாய் நோட்டு கிடைத்துள்ளது. நீ கொடுத்து வைத்தவள் இல்லையா என உபேந்திரா தனது மனைவியை பார்த்து கேட்டார்.

மோடி

மோடி

கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள், தபால் நிலையங்கள் முன்பு தினமும் வரிசையில் கால் வலிக்க காத்துக் கிடக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kannada hero Upendra has gifted new Rs. 2000 note to his actress wife Priyanka on her birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil