»   »  அரசியலுக்கு வரவே நடிக்க வந்தேன்: சீனியர் ஹீரோ பரபர பேட்டி

அரசியலுக்கு வரவே நடிக்க வந்தேன்: சீனியர் ஹீரோ பரபர பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் தான் நடிக்க வந்தேன் என்று உபேந்திரா தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் உபேந்திரா தனிக்கட்சி துவங்குவதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னட திரையுலகில் பிரபலமான அவர் தனது ரசிகர்கள், குடும்பத்தாருடன் கலந்து பேசி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

நடிப்பு

நடிப்பு

அரசியலுக்கு வரும் எண்ணத்துடன் தான் நடிக்க வந்தேன். சிறுவயதில் இருந்தே அரசியல் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. சிறு வயதில் நான் சொன்ன ஐடியாக்களை யாரும் ஏற்கவில்லை.

பெரிய ஆள்

பெரிய ஆள்

சமூகத்தில் பெரிய ஆளாக ஆனால் தான் நாம் சொல்வது எடுபடும் என்று புரிந்தது. அதன் பிறகே சினிமா துறையில் நுழைந்தேன். அரசியல் குறித்து என் நண்பர்கள், குடும்பத்தாரின் கருத்துகளை கேட்டு வந்தேன். அதன் பிறகே கட்சி துவங்கும் முடிவை எடுத்தேன்.

கட்சி

கட்சி

தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் பலரை எனக்கு பிடிக்கும். ஆனால் அவர்களின் கொள்கைகள் எனக்கு ஒத்து வராது. அதனாலேயே தனிக்கட்சி துவங்குகிறேன்.

பணம்

பணம்

தற்போதைய அரசியல் பணத்தை வைத்து நடத்தப்படுகிறது. அதனால் தான் நான் எந்த கட்சியிலும் சேராமல் தனிக்கட்சி துவங்க முடிவு செய்தேன் என்றார் உபேந்திரா.

English summary
Kannada actor Upendra is set to start a new political party soon. He said that he came to film industry with politics in mind.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil