»   »  கன்னடத்திற்கு போகும் தமிழ் படங்கள்

கன்னடத்திற்கு போகும் தமிழ் படங்கள்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான அண்ணாமலை கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வசூல்சாதனை செய்து கொண்டுள்ளது.

சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில், தேவாவின் சூப்பர் ஹிட் பாடல்களுடன், ரஜினி, குஷ்பு நடிப்பில் உருவாகிவசூல் சாதனை செய்த அண்ணாமலை படத்தை கன்னடத்தில் வித்தியாச நடிகராக அடையாளம் காணப்பட்டுள்ளஉபேந்திரா, கோகர்ணா என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்துள்ளார். (இவர் தான் பிரியங்கா திரிவேதியைசமீபத்தில் கைப்பிடித்தவர்).

ரஜினி நடித்த வேடத்தில் உபேந்திராவே நடித்துள்ளார். குஷ்பு கேரக்டரில் ரக்ஷிதா நடித்துள்ளார். கோகர்ணாவின்ஆரம்ப கட்ட வசூல் இதுவரை கன்னடத் திரையுலகில் எந்தப் படத்திற்கும் கிடைக்காத அளவில் பிரமாதமாகஉள்ளதாம்.

உபேந்திராவின் முந்தைய இரு படங்களான குதும்பா மற்றும் ரக்தகண்ணீரு (தமிழில் எம்.ஆர்.ராதா நடித்த ரத்தகண்ணீரின் ரீமேக்) ஆகியவையும் நூறு நாட்களைத் தாண்டி ஓடி வசூலில் புதிய சாதனை படைத்துள்ள நிலையில்தற்போது வெளியாகியுள்ள கோகர்ணாவும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது.

இதற்கு முன்பு ரவிச்சந்திரனும் விஷ்னுவர்த்தனும் தான் தமிழ் படங்களை உல்டா செய்து காசு பார்த்து வந்தனர்.இப்போது உபேந்திரா உள்பட பலரும் தமிழ் ரீமேக்குகளில் இறஙகிவிட்டனர். கமல்ஹாசனின் சிப்பிக்குள்முத்துவும் இப்போது கன்னடத்தில் எடுக்கப்பட்டுவிட்டது. இதில் கமல் ரோலில் சுதீப் என்பவரும், ராதிகாவின்ரோலில் நம்ம ஊர் மீனாவும் நடித்தனர்.

முன்னதாக அஜீத் நடித்த அமர்க்களம் கூட ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் நடிக்க ரீமேக் செய்யப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

காப்பியும் அடித்துவிட்டு தமிழைத் திட்டாமல் இருந்தால் சரி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil