»   »  உப்புக்கருவாடு… சிரிச்சு சிரிச்சு… வயிறு புண்ணாகப் போகுதாம்!

உப்புக்கருவாடு… சிரிச்சு சிரிச்சு… வயிறு புண்ணாகப் போகுதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நகைச்சுவை கதையை கடல்வாழ் மக்களின் வாழ்க்கையோடு கலந்து சொல்லியுள்ள கதைதான் ‘உப்புக்கருவாடு'. ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் கருணாகரனும், நந்திதாவும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது.

‘அழகிய தீயே', ‘மொழி', ‘அபியும் நானும்', ‘பயணம்' ஆகிய தரமான படங்களை இயக்கிய இயக்குநர் ராதாமோகன், தனது அடுத்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் ராதாமோகன் தனது புதிய படத்திற்கு ‘உப்புக்கருவாடு' என்ற தலைப்பு வைத்துள்ளார். இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்' படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படம் எதிர்பார்த்தளவு வெற்றி பெறவில்லை என்பதால் ‘உப்புக்கருவாடு' படத்தில் அதிக முயற்சியுடன் உழைக்க இயக்குநர் ராதாமோகன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நகைச்சுவை கதை

நகைச்சுவை கதை

உப்புக்கருவாடு முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். லட்சியம் உள்ளவர்கள் சமரசம் ஆகக்கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும் என்கிறார் ராதாமோகன் இதை அடிப்படையாக வைத்தே உப்புக்கருவாடு படத்தினை இயக்கியுள்ளாராம்.

கருணாகரன் – நந்திதா

கருணாகரன் – நந்திதா

இந்தப்படத்தில் ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்த கருணாகரன் ஹீரோவாக நடிக்கிறார். நந்திதா ஜோடியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, புதுமுகம் ரக்ஷிதா, டவுட் செந்தில், ஆகியோர் நடிக்கின்றனர்.

அறிமுக இசையமைப்பாளர்

அறிமுக இசையமைப்பாளர்

பிரபல கிடார் இசைக்கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறாராம். பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராம்ஜி நரசிம்மனுடன் இணைந்து உப்புக்கருவாடு படத்தை தயாரிக்கிறார் ராதாமோகன்.

கடல் வாழ் மக்கள்

கடல் வாழ் மக்கள்

கடல்சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘உப்புக்கருவாடு' அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் கதை என்கிறார் ராதாமோகன்.

சுள்ளுன்னு இழுக்குமா?

சுள்ளுன்னு இழுக்குமா?

ராதாமோகனின் உப்புக்கருவாடு ரசிகர்களை சுள்ளென்று இழுக்குமா? பொருத்திருந்து பார்க்கலாம்.

English summary
Director Radha Mohan has been wanting to make a comedy for a while now. With Tamil film Uppu Karuvadu, he will be attempting a full-length comedy for the first time."It has been my intention all through to make a humorous film. Somehow I do not believe in mindless humour, and here in Uppu Karuvadu, I had a perfect platform to infuse sensible comedy," said Mohan.
Please Wait while comments are loading...