»   »  தன்னை விட வயதில் 10 வயது குறைவான தொழில் அதிபரை மணந்த கமல் ஹீரோயின்

தன்னை விட வயதில் 10 வயது குறைவான தொழில் அதிபரை மணந்த கமல் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் காஷ்மீரை சேர்ந்த தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் ஊர்மிளா மடோன்கர்(42). ஷங்கரின் இந்தியன் படத்திலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஊர்மிளாவுக்கு வியாழக்கிழமை மும்பையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஊர்மிளாவின் வீட்டில் இந்து முறைப்படி நடந்தது.

முஸ்லீம் கணவர்

முஸ்லீம் கணவர்

ஊர்மிளா காஷ்மீரை சேர்ந்த தொழில் அதிபரான மொஹ்சின் அக்தர் மிர் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அக்தர் ஊர்மிளாவை விட 10 வயது குறைந்தவர். அவருடைய வயது 32.

மாடல்

மாடல்

அக்தருக்கு சொந்த வியாபாரம் இருக்கின்ற போதிலும் அவருக்கு மாடலிங், நடிப்பு மீது ஈர்ப்பு ஏற்பட்டதால் மும்பைக்கு வந்தார். பாலிவுட் படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அக்தர் மாடலிங்கும் செய்கிறார்.

மனிஷ் மல்ஹோத்ரா

மனிஷ் மல்ஹோத்ரா

பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா அக்தரின் நண்பர். மனிஷும், ஊர்மிளாவும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளவர்கள். இந்நிலையில் ஊர்மிளா அக்தரை மணந்துள்ளார்.

திருமணம்

திருமணம்

ஊர்மிளாவின் திருமணம் குடும்பத்தார் முன்னிலையில் அமைதியாகவும், ரகசியமாகவும் நடந்துள்ளது. முன்னதாக நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் தனது காதலர் ஜீனை லாஸ் ஏஞ்சல்ஸில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Urmila Matondar has married a Kashmiri businessman named Mohsin Akhtar Mir on thursday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil