»   »  மழை வெள்ளத்தில் நீந்தி கரை சேருமா இந்த உறுமீன்?

மழை வெள்ளத்தில் நீந்தி கரை சேருமா இந்த உறுமீன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன், அப்புக்குட்டி மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் இன்று வெளிவந்திருக்கும் படம் உறுமீன்.

சக்திவேல் பெருமாள்சாமி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். சுமார் 6 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் உறுமீன் படத்தில் நிஜக் காதலர்களான பாபி சிம்ஹா மற்றும் ரேஷ்மி மேனன் இணைந்து நடித்திருக்கின்றனர்.


இன்று வெளியாகவிருந்த ரஜினிமுருகன் மற்றும் ஈட்டி ஆகிய படங்கள் தள்ளிப்போன நிலையில் உறுமீன் படத்தை தயாரிப்புக் குழுவினர் துணிந்து வெளியிட்டு இருக்கின்றனர்.


சென்னையின் கடுமழை உறுமீனைப் பாதித்ததா இல்லை காப்பாற்றிக் கரை சேர்த்ததா? என்பதைக் காணலாம்.


முதல் பாதி

"உறுமீன் படத்தின் முதல் பாதியில் இயக்குநர் புத்திசாலித்தனமாக கதை சொல்லவில்லை. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன் இதிலாவது இயக்குநர் நன்றாக கதை சொல்ல வேண்டும்".வினோவின் பதிவிது.


வசீகரிக்கிறது

உறுமீன் முதல் பாதி பேன்டஸி கலந்த திரில்லராக எல்லா வகையிலும் வசீகரிக்கின்றது. நல்ல ஒரு தரமான தயாரிப்பு என்று கூறியிருக்கிறார் வெங்கட் பிரவீன்.


பழிக்குப்பழி

பாபி சிம்ஹா நன்றாக நடித்திருக்கிறார். உறுமீன் ஒரு வித்தியாசமான உணர்வைத் தந்தது, உறுமீன் பழிக்குப்பழி வாங்கும் வித்தியாசமான கதை என்று ரகுவிநாயக் புகழ்ந்திருக்கிறார்.


ஹவுஸ்புல்

"அரங்கம் நிறைந்திருக்கிறது, நடிகர் பாபி சிம்ஹாவிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறேன்" என்று நவீன் விஜய் கூறியிருக்கிறார்.


மொத்தத்தில் சுமார் 350 திரையரங்களில் இன்று வெளியான உறுமீன் திரைப்படம், ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது என்பதே உண்மை.English summary
Bobby Simha's Urumeen Today Released more than 350 Screens - Audience Live Response.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil