»   »  பாபி சிம்ஹா,ரேஷ்மி மேனன் (காதலர்களின்) நடிப்பில் உறுமீன்.. டிசம்பர் 4 முதல்

பாபி சிம்ஹா,ரேஷ்மி மேனன் (காதலர்களின்) நடிப்பில் உறுமீன்.. டிசம்பர் 4 முதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவாகியிருக்கும் உறுமீன் திரைப்படம் டிசம்பர் 4ம் தேதியன்று வெளியாகிறது.

நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன், கலையரசன், அப்புக்குட்டி,காளி வெங்கட் மற்றும் சன்னி லியோன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் உறுமீன்.


Urumeen Release Date Here

புதுமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார்.


இந்தப் படத்தில் நடிக்கும்போது பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் இருவருக்கும் இடையில் உண்டான காதல் தற்போது நிச்சயதார்த்தத்தில் வந்து முடிந்திருக்கிறது.


இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது. ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருக்கும் உறுமீன் திரைப்படம் சுமார் 6 கோடி செலவில் உருவாகியிருக்கிறது.இந்நிலையில் படத்தின் இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் "வருகின்ற 4ம் தேதியில் வெளியாகிறது. ஒரு அதிரடி ஆக்ஷன் பயணத்திற்கு தயாராக இருங்கள்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.


English summary
Debutante Director Sakthivel Perumalsamy Tweeted "URUMEEN from DECEMBER 4th..get ready for the action ride".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil