Just In
- 9 min ago
பிறந்தநாள் அதுவுமா இமானுக்கு இன்ப அதிர்ச்சி.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் இசையமைப்பாளர்!
- 40 min ago
பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
- 1 hr ago
இவ்ளோ க்ளோஸ் ஆகாதும்மா.. விக்னேஷ் சிவனுடன் ஓவர் நெருக்கத்தில் நயன்தாரா.. காண்டாகும் ரசிகர்கள்!
- 1 hr ago
திரும்பிச் செல்லுங்கள்.. படப்பிடிப்பில் விவசாயிகள் மீண்டும் ஆர்ப்பாட்டம்.. ஷூட்டிங் கேன்சல்!
Don't Miss!
- News
சென்னை மெரினாவில் குடியரசு தினவிழா இறுதிக்கட்ட ஒத்திகை... முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு!
- Sports
மைதானத்துல தான் ஆக்ரோஷமா இருப்பாரு... வெளியில அப்படி ஒரு பணிவு... ஜோஷ் பிலிப் பாராட்டு
- Finance
Budget 2021.. ஹெல்த்கேர் துறையில் ஒதுக்கீடு 40% வரை அதிகரிக்கலாம்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Automobiles
தமிழ்நாட்டை பாத்து கத்துக்கணும்... பாராட்டி தள்ளிய மத்திய அமைச்சர்.. எதற்காக என தெரிந்தால் அசந்திருவீங்க!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிரபல கிளாமர் நடிகையின் பேஸ்புக் கணக்கு முடக்கம்.. ஹீரோயின் அதிர்ச்சி.. ஓடி வந்து உதவிய போலீஸ்!
மும்பை: பிரபல கிளாமர் நடிகையின் பேஸ்புக் பக்கத்தை, ஹேக்கர்கள் திடீரென்று முடக்கினர்.
'சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர், பிரபல மாடல் ஊர்வசி ரவ்தெலா. இதில் சன்னி தியேல், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர்.
இதையடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
ம்ஹூம்..அது ஷாருக்கானுக்காக பண்ணினது.. இனி அப்படிலாம் செய்ய மாட்டேன்..முடிவை மாற்றிய பிரியாமணி!

திருட்டுப் பயலே 2
இப்போது திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார், இயக்குனர் சுசி கணேசன். இதில் தமிழில் அமலா பால் நடித்த கேரக்டரில் நடித்து வருகிறார் ஊர்வசி ரவ்தெலா. தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இவர், தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கிறங்கடிப்பது வழக்கம்.

ஆபாசத் தகவல்கள்
இதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இந்நிலையில் இவரது பேஸ்புக் பக்கத்தை யாரோ முடக்கியுள்ளனர். அதில் சில ஆபாசத் தகவல்களை பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, ட்விட்டரில் இதுபற்றி தெரிவித்துள்ள ஊர்வசி, எனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது. அதில் உள்ள எந்த பதிவுக்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம். அது நானோ, எனது டீமோ பதிவிட்டது அல்ல என்று தெரிவித்துள்ளார்.

சைபர் கிரைம்
இதுபற்றி மும்பை போலீசார், ஊர்வசி ரவ்தெலாவுக்கு ட்வீட் செய்துள்ளனர். அதில், இதுதொடர்பான புகாரை, சைபர் கிரைமுக்கு அனுப்பி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஊர்வசி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ், ஊர்வசி புகார் கொடுக்காமல்யே, சைபர் கிரைமுக்கு பார்வேர்ட் பண்ணியிருக்கீங்களே? என்று கேட்டுள்ளனர்.

கணக்கு மீட்பு
இந்நிலையில், அவரது பேஸ்புக் கணக்கு பின்னர் மீட்கப்பட்டது. இதுபற்றி நடிகை ஊர்வசி, 'மீண்டும் வந்துவிட்டேன். என கணக்கு மீட்கப்பட்டு விட்டது. நன்றி' என்று தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் அவரிடம் எப்படி மீட்கப்பட்டது என்று கேட்டு வருகின்றனர்.

இலக்கணப் பிழை
நடிகை ஊர்வசி, சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி இருந்தார். நியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ஜேபி பிரம்மெர், ஆஸ்கர் விருதுபெற்ற கொரிய திரைப்படமான 'பாரசைட்' பற்றி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் சில ஆங்கில இலக்கணப் பிழை இருந்தன. அதைக் கூட சரி பண்ணாமல், அதை அப்படியே காப்பி செய்து தனது கருத்துபோல் பதிவிட்டிருந்தார், ஊர்வசி ரவ்தெலா.

கிராமர் மிஸ்டேக்
இதைக் கண்டுபிடித்து ஒருவர் இரண்டையும் அருகருகே வைத்து பதிவிட்டிருந்தார். மற்றவர்களின் ட்வீட்டை காப்பி பேஸ்ட் பண்ணும்போது, குறைந்தபட்சம் கிராமரையாவது சரி பண்ணியிருக்கலாம்?' என்று அவர் கூறியிருந்தார். இது சர்ச்சையானது. பின்னர் இதற்கும் ஊர்வசிக்கும் சம்மந்தமில்லை என்றும் சோசியல் மீடியா டீம்தான் இதை செய்தது என்றும் அவர் டீமில் இருந்து விளக்கம் அளித்தனர்.