»   »  அமெரிக்காவுக்கே வந்துவிடுமாறு என்னை அழைக்கிறார்கள்! - கமல் ஹாஸன்

அமெரிக்காவுக்கே வந்துவிடுமாறு என்னை அழைக்கிறார்கள்! - கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
கமல் ஹாஸனை அழைக்கும் அமெரிக்க மக்கள்- வீடியோ

சென்னை: அமெரிக்காவில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. எனவே இங்கேயே வந்துவிடுங்கள் என நிறைய பேர் அழைக்கிறார்கள் என கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக ட்விட்டரில் அதிரடியாக கருத்துத் தெரிவித்து வந்த கமல் ஹாஸன், தனது விஸ்வரூபம் 2 மற்றும் சபாஷ் நாயுடு படங்களை முடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக அவர் அரசியல் கருத்துகள் எதையும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

US fans want me to stay US permanantly, says Kamal

வார இதழ் ஒன்றில் தனது கருத்துகளை கட்டுரைத் தொடராக எழுதி வருகிறார்.

கட்சி தொடங்குவேன், அரசியல் மாற்றம் நிகழ்த்துவேன் என்று கூறிய கமல், இப்போது அமைதி காப்பதால், அவரது அரசியல் பிரவேசம் என்ன ஆனது என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கு பதில் கூறியுள்ளார்.

இப்போது சினிமா வேலைகள் இருப்பதால், அவற்றை முடித்துக் கொண்ட பிறகு அரசியலுக்கு வருவேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள பலர் தனது சாதனைகளை மெச்சிப் பேசி, அரசியலுக்குப் போகாமல் அமெரிக்காவிலேயே இருந்துவிடுமாறும், அங்குள்ள தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறும் கேட்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

English summary
Kamal Haasan says that most of his Us fans want him to stay in America.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X