»   »  கபாலி முதல் காட்சி பார்க்க அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு படையெடுக்கும் ரசிகர்கள்!

கபாலி முதல் காட்சி பார்க்க அமெரிக்காவிலிருந்து தமிழகத்திற்கு படையெடுக்கும் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவிலிருந்து கோடை விடுமுறைக்கு தமிழகம் செல்ல விரும்பும் ரஜினி ரசிகர்கள், கபாலி ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவில் மே கடைசி வாரம் முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால், மே முதல் ஆகஸ்டு வரை அமெரிக்காவிலிருந்து தமிழகம் சென்று வருபவர்கள் ஏராளம்.


US Rajini fans eagerly waiting for Kabali release date

இந்த காலக் கட்டத்தில் விமானக் கட்டணமும் அதிகமாக இருக்கும். சில சமயங்களில் இரு மடங்காக உயர்வதும் உண்டு. ஆகையால் ஊருக்கு செல்ல விரும்புவர்கள் 6 மாதங்களுக்கு முன்னதாகவே திட்டமிட்டு டிக்கெட் வாங்குவது உண்டு.


மனைவி வேலைக்குச் செல்லாதவர் என்றால், குழந்தைகளையும் மனைவியையும் இரண்டு மாதங்கள் வரை ஊரில் விட்டு விட்டு, கணவர் மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை தமிழகத்தில் தங்கி வருவார்.


இருவரும் வேலைக்கு செல்பவர்கள் என்றால் மூன்று அல்லது நான்கு வாரங்களில் திரும்பி வருவார்கள்.


இந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதால், அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தமிழகத்தில் 'ஃப்ர்ஸ்டே ஃபர்ஸ்ட் ஷோ' (FDFS) அனுபவத்தைப் மீண்டும் பெற ஆவலாக உள்ளார்கள்.


நாம் தொடர்பு கொண்ட பெரும்பாலான ரஜினி ரசிகர்கள், சம்மரில் ஊருக்கு போகனும். ஆனால் டிக்கெட் வாங்க வில்லை. கபாலி ரீலிஸ் தேதி தெரிந்த பிறகுதான் புக் பண்ணனும் என்றார்கள்.


US Rajini fans eagerly waiting for Kabali release date

விமான டிக்கெட் விலை அதிகரிக்குமே என்றால், 'பரவாயில்லை தலைவர் பட்த்தை மீண்டும் ஒரு தடவை ஃப்ர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, நம்ம ஊரில் பார்க்க இப்படி வாய்ப்பு கிடைப்பதுதான் பெரிய சந்தோஷம்' என்றார்கள்.


சிகாகோவில் இருக்கும் ராஜா ராம்தாஸ் என்ற ரசிகரோ ஒரு படி மேலே போய், "இது தேர்தல் ஆண்டு. தலைவர் எப்போதுமே, எங்கிருந்தாலும் ஜனநாயகக் கடமையாற்ற, வாக்களிக்க சென்னைக்கு வந்து விடுவார்.


அதே போல், இந்த தேர்தலில் வாக்களித்து விட்டு, நண்பர்களுடன் கபாலி ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ பார்த்து விட்டு வரணும். கபாலி ரீலிஸ் தேதி அறிவித்த பிறகு தான் விமான டிக்கெட் புக் பண்ணப்போகிறேன்," என்றார் நம்மிடம்.


US Rajini fans eagerly waiting for Kabali release date

அமெரிக்காவில் இதுவரையிலும் இல்லாத அளவுக்கு எட்டரை கோடி ரூபாய்க்கு, கபாலி உரிமை விற்பனை ஆகியுள்ள நிலையில், முதல் காட்சியை தமிழகத்தில் தங்களுக்கு ப்ரியமான தியேட்டரில் பார்க்கவும், ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.


அமெரிக்க ரஜினி ரசிகர்கள் தமிழகத்தில் கபாலி ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோ பார்ப்பது, இயக்குனர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தாணு கையில்தான் இருக்கிறது.
கபாலி வெளியீட்டுத் தேதியை, இப்போதே அறிவித்து, படத்தை தேர்தலுக்கு அடுத்த வாரம் வெளியிட்டால், தமிழக தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது!


-இர தினகர்

English summary
Most of the Rajini fans from US are eagerly waiting to watch their icon's Kabali first day first show in Tamil Nadu during this summer

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil