»   »  'பொர்க்கி' புகழ் சு சாமிக்கு அமெரிக்க ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒரு எச்சரிக்கை!

'பொர்க்கி' புகழ் சு சாமிக்கு அமெரிக்க ரஜினி ரசிகர்களிடமிருந்து ஒரு எச்சரிக்கை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஃப்ரிஸ்கோ: அமெரிக்காவில் உள்ள ரஜினி ரசிகர்கள் பேரவை சுப்பிரமணிய சாமியைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளது.

போகுமிடமெல்லாம் வம்பு வளர்ப்பதில் தனி டாக்டர் பட்டமே தரலாம் சுப்பிரமணிய சாமிக்கு. 90களில் ரஜினியை அரசியலுக்கு வரச் சொல்லி நடையாய் நடந்தவர் சுப்பிரமணிய சாமி.

US Rajini fans strongly condemned Subramaniya Swamy

இப்போது ரஜினி அரசியலுக்கு வரும் சூழலில் அவரைக் கடுமையாகத் திட்டித் தீர்க்கிறார். ஆனால் அவர் இருக்கும் பாஜகவோ சு சாமியைக் கண்டிக்காமல், வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.

தற்போது அமெரிக்காவில் ஓய்வெடுத்து வரும் ரஜினி, நண்பர்களுடன் ஒரு பொழுதுபோக்கு விடுதியில் கேஸினோ டேபிளில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு படம் வெளியானது. உடனே அதை ட்விட்டரில் வெளியிட்ட சு சாமி, ரஜினியை 420 என விமர்சித்துள்ளார். இதை ரஜினி கண்டு கொள்ளவில்லை. ஆனால் அவரது ரசிகர்கள் சாமியை வலைத் தளங்களில் காய்ச்சி எடுத்துள்ளளனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் டல்லாஸில் இயங்கும் 'வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை' சுப்பிரமணிய சாமியை வன்மையாகக் கண்டித்தும் எச்சரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "ஹார்வர்ட் பல்கலையில் பட்டம் பெற்ற 'அரசியல் தரகர்' உயர்திரு சுப்ரமணியன் சாமிக்கு,

வணக்கம்,.

தாங்கள் எங்கு படித்தீர்கள் என்பதைக் கூட உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள பரிதாப நிலையைக் கண்டு வருத்தப்படுகிறோம்.

அமெரிக்காவில் படிக்கும் போதும், பேராசிரியர் என்ற பெயரில் ஏதோ ஒரு வேலை பார்த்த போதும் நீங்கள் செய்த சாகசங்களை இப்போது வெளியிட்டால் எப்படி இருக்கும்.

அமெரிக்கா வருபவர்களை எல்லாம் அந்தந்த ஊர்களில் உள்ள முக்கிய இடங்களுக்கு பார்வையிட அழைத்துச் செல்லும் போது காஸினோவும் மறக்காமல் இடம்பெறுகிறதே.

US Rajini fans strongly condemned Subramaniya Swamy

அமெரிக்காவுக்கு வரும் பெற்றோர்களை, பிள்ளைகள் அங்கு மறக்காமல் அழைத்துச் செல்கிறார்களே. பெற்றோரும் அங்கு சென்று வந்து புகைப்படங்கள் எடுத்து சமூகத் தளங்களில் பகிர்ந்து கொள்கிறார்களே. காஸினோ சென்றவர்கள் எல்லாரும் 420 என்றால், அமெரிக்காவுக்கு வந்த பெற்றோர்களில் 90 சதவீதம் அங்கு சென்றிருக்கிறார்களே. அவர்களையும் சேர்த்துத்தான் 420 என்கிறீர்களா? ஏன் நீங்களும் பல முறை பார்த்ததுதானே இத்தகைய கேஸினோக்களை.

பெற்றோர்கள் வருவது போல் ரஜினியும் அமெரிக்காவுக்கு ஒய்வெடுக்க வந்துள்ளார். அவரது நண்பர்கள் அவரை பல இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்டமுடியாமல் அவரும் உடன் செல்கிறார். அதில் ஒன்று காசினோ. சூதாட வேண்டும் என்றிருந்தால் பத்து பேரை சேர்த்துக் கொண்டு உடன் போட்டோகிராபரையும் அழைத்துச் செல்வாரா? அல்லது படம் எடுக்கத்தான் அனுமதிப்பாரா?

சினிமாவுக்கு வந்த காலம் முதலாகவே தன்னுடைய வாழ்க்கை பற்றி எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார் ரஜினி. காஸினோ போனதையும் அவர் மறைக்க விரும்பவில்லை. படம் எடுப்பவர்களைத் தடுக்கவில்லை. படம் வெளிவந்தது பற்றியும் கவலைப்படப் போவதுமில்லை. சீட்டுக்கட்டை தூக்கியவர்கள் எல்லாம் சூதாட்டக்காரர்கள் என்றால் தமிழகத்தில், ஏன் இந்தியாவில் உள்ள் அனைவருமே சூதாடிகள்தானே.

காஸினோவுக்கு பார்வை இடச் சென்ற லட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்.

அமெரிக்காவில் படித்து வேலை பார்த்த உங்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம் அது. அதை வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டுளீர்களே. அய்யோ பாவம்.

எந்த சசிகலாவுக்கு எதிராக ஊழல் வழக்கு தொடர்ந்தீர்களோ, அதே சசிகலாவுக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்யாவிட்டால் கவர்னர் மீது வழக்குத் தொடுப்பேன் என்று சூளுரைத்தவர்தானே நீங்கள்.

வெளிப்படையான, மக்கள் மீது நலன் கொண்டவர்கள் அரசியலுக்கு வந்தால், உங்கள் கல்லா நிரம்பாது என்பதால் ரஜினி பற்றி அவதூறு பரப்புகிறீர்களா? அல்லது மன்னார்குடி கும்பலிடம் படிந்துள்ள பேரத்திற்கான கூவலா இது? ரஜினி மீது அவதூறாகப் பேசுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். முன்பு ரஜினிக்கு உலகெங்கும் ரசிகர்கள் இருப்பதை உங்களிடம் யாராவது தெரிவித்தார்களா என்று தெரியாது. நாவை அடக்காவிட்டால் உலகெங்கும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் உங்களை விரட்டுவது உறுதி.

சியாட்டலில் தமிழர்கள் உங்களை விரட்டியடித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறோம்.

நிர்வாகிகள்

வட அமெரிக்க தலைவர் ரஜினிகாந்த் பேரவை
ஃப்ரிஸ்கோ, யுஎஸ்ஏ

English summary
North American Rajinikanth Fans Federation has strongly condemned Subramanya Swamy for his worst comment on Rajinikanth

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil