»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

அமெரிக்கத் திரைப்பட விழா சென்னையில் ஆகஸ்ட் 8-ம் தேதிமுதல் 19-ம் தேதி நடைபெற உள்ளது.

அண்ணா சாலையில் உள்ள அமெரிக்கத் தகவல் மைய கலையரங்கில் இவ் விழா நடைபெறுகிறது. அமெரிக்கத்திரைப்படங்களில் நகைச்சுவைக் கதாநாயகிகள் என்ற பொருளில் இவ் விழா நடைபெற உள்ளது.

50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படங்கள் முதல் சமீபத்தில் வெளியான அமெரிக்க படங்கள் இவ் விழாவில்திரையிடப்படும்.

ஐ ரிமெம்பர் மம்மா, டிரைவிங் மிஸ் டெய்ஸி, மேம், ராம்பிளிங் ரோஸ், பிரைவேட் பெஞ்சமின், சிஸ்டர் ஆக்ட்,பிரெட்டி உமன், போக ஹோண்டாஸ் ஆகிய படங்கள் இவ் விழாவில் திரையிடப்பட உள்ளன.

இவ் விழாவுக்கு அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இவ் விழாவை சென்னையில் உள்ளஅமெரிக்கத் தூதரக அலுவலகத்தின் பொது விவகாரத் துறையும், இந்தியத் திரைப்படச் சங்கங்களின்கூட்டமைப்பின் தென் மண்டலக் கிளையும் இணைந்து நடத்துகின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil