»   »  மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மே 1-ம் தேதி உத்தம வில்லன் ரிலீஸ்... தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் மே 1-ம் தேதி கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படம் உலகெங்கும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Uthama Villain from May 1

திருப்பதி பிரதர்ஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். கமலுடன் கே பாலச்சந்தர், கே விஸ்வநாத், ஜெயராம், பூஜா குமார், ஆன்ட்ரியா நடித்துள்ளனர்.


Uthama Villain from May 1

இந்தப் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். கமல் கதை திரைக்கதை எழுதியுள்ளார்.


ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படம் கடந்த ஆண்டே வெளி்யாகவிருந்தது. ஆனால் சில தள்ளிப் போடல்களுக்குப் பின் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் சென்சார் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டது.


இந்த நிலையில், திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் படத்தை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் ஆகியவை கூட்டாக படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.


Uthama Villain from May 1

மே 1-ம் தேதி உலகெங்கும் அதிக அரங்குகளில் உத்தம வில்லன் வெளியாகும் என தெரிவித்துள்ளதோடு, படத்தின் ரிலீஸ் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

English summary
Thirupathi Bros Film Media Pvt Ltd & Raaj Kamal Films International & Eros International Presents, Ghibran Musical, Ramesh Aravind Directorial, Kamal Haasan in "Uttama Villain" to be released on May 1st 2015.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil