»   »  உத்தம வில்லன் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப் போனது... ஏப்ரல் 10 ம் தேதி வெளியாகிறத!

உத்தம வில்லன் ரிலீஸ் ஒரு வாரம் தள்ளிப் போனது... ஏப்ரல் 10 ம் தேதி வெளியாகிறத!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படம் அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2-ம் தேதியிலிருந்து மேலும் ஒரு வாரம் தள்ளிப் போகிறது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள புதிய படம் உத்தம வில்லன். படத்தின் ட்ரைலர், இசை சமீபத்தில் வெளியாகின.


கமல்

கமல்

இந்தப் படத்தில் கமல் இரு வேடங்களில் நடித்துள்ளார். பத்து கெட்டப்புகளில் தோன்றுகிறார். அவருடன் அமரர் கே பாலச்சந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


2 நாயகிகள்

2 நாயகிகள்

பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா இருவரும் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.


ரிலீஸ்

ரிலீஸ்

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி உலகெங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.


சிக்கல்

சிக்கல்

ஆனால் அந்தத் தேதியில் படத்தை வெளியிடுவதில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கு சில பிரச்சினைகள் உள்ளன. அடுத்த இரு வாரங்களில் திருப்பதி பிரதர்ஸின் இடம் பொருள் ஏவல் வெளியாகிறது. அந்தப் படம் வெளியான ஒரே வாரத்தில் உத்தம வில்லனை வெளியிட முடியாது என்பதால் தள்ளி வைக்கப்படுகிறது.


ஏப்ரல் 10- ம் தேதி

ஏப்ரல் 10- ம் தேதி

உத்தம வில்லன் படத்தை வரும் ஏப்ரல் 10-ம் தேதி வெளியிட இப்போது முடிவு செய்துள்ளனர்.


ஏப்ரல் 2-ம் தேதி உதயநிதியின் நண்பேன்டா, விஜயகாந்த் மகனின் சகாப்தம் போன்ற படங்கள் வெளியாகவிருக்கின்றன.
English summary
Kamal Hassan's new movie Uthama Villain release has been postponed for a week from April 2nd.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil