»   »  சினிமா விழாவில் அரசியல்... நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்

சினிமா விழாவில் அரசியல்... நடிகை ராதிகாவுக்கு இயக்குநர் ராஜசேகர் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

‘உயிரே உயிரே' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளம் நடிகர்களை, நடிகை ராதிகா விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என அப்படத்தின் இயக்குநர் ராஜசேகர் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது இயக்கத்தில் உருவாகியுள்ள, ‘உயிரே உயிரே' படத்தின் இசை வெளியீட்டு விழா சனிக்கிழமை நடந்தது.

ராதிகா பேச்சு

ராதிகா பேச்சு

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களுள் ஒருவராகக் கலந்துகொண்ட நடிகை ராதிகா பேசும்போது, 'இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை. மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பிக் கொண்டிருக்கின்றனர்' என்றார்.

இது கண்டிக்கத்தக்கது

இது கண்டிக்கத்தக்கது

ஒரு படத்தின் விழா மேடையில் அந்த நடிகர், நடிகைகளை பற்றியோ, அதில் பணிபுரியும் டெக்னீசியன் பற்றியோதான் பேச வேண்டும். ஆனால், அரசியல் நோக்கில் நடிகர் சங்க பிரச்சினையை மறைமுகமாக ராதிகா பேசியதுகண்டிக்கத்தக்கது.

ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்

ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள்

இளம் நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையுடன்தான் உள்ளனர். ஒருவருக்கு ஒரு கதை செட் ஆகவில்லை என்றால், அந்த கதைக்கு யார் நடித்தால் நன்றாக இருக்குமோ அவர்களுக்கு மற்ற இளம் நடிகர்கள் சிபாரிசு செய்கின்றனர். அந்த அளவுக்கு இளம் நடிகர்களுக்குள் ஒற்றுமை உள்ளது.

மோகன் பாபுவைப் பார்த்து கத்துக்கங்க

மோகன் பாபுவைப் பார்த்து கத்துக்கங்க

மூத்த நடிகர்கள் அனைவரும் இளம் நடிகர்களுக்கு வழிவிட வேண்டும். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாதான் பொக்கிஷம் என மோகன்பாபு தெரிவித்தார். அப்படி இருக்கையில் இதுபோன்ற தவறான கருத்தை ராதிகா தெரிவித்தது நாகரிகமற்றது," என்றார் ராஜசேகர்.

English summary
Uyire Uyire movie director Rajasekar has condemned actress Radhika for politicise his Uyire Uyire movie audio launch stage.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil