twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனது 17 படங்களுக்கும் யு சான்றுதான்! - மீண்டும் வி.சேகர்

    By Shankar
    |

    ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒவ்வொரு பாணி உண்டு. அடிதடி வெட்டுகுத்து, இசைபின்னணி, காதல், காமெடி என ஒவொருவரும் ஒரு பாணியை நூல் பிடித்தாற் போல் பிடித்து வெற்றி வாகை சூடியவர்கள் பலர் !

    அதில் குடும்ப கதை மட்டுமே தன் பாணி என்று படமெடுத்து அத்தனையிலும் வெற்றிவாகை சூடியவர் இயக்குனர் வி.சேகர்.

    அவரிடம் ஒரு சிறு உரையாடல்..

    குடும்பக் கதைகள் மட்டும்தான் இயக்க வேண்டும் என கொள்கை வைத்திருக்கிறீர்களா?

    குடும்பக் கதைகள் மட்டும்தான் இயக்க வேண்டும் என கொள்கை வைத்திருக்கிறீர்களா?

    நாம் எல்லோரும் குடும்பதிற்காகத் தான் வாழ்கிறோம். குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறோம்! எதிர்கால சிந்தனை கூட கும்பதிற்காக மட்டுமே யோசிக்கிறோம்.

    ஓவொரு குடும்பத்தில் நடக்கிற விஷயங்களை பதிவு செய்கிற போது அது தங்கள் வீட்டு நிகழ்வு போல் நினைத்து என் படங்களை வெற்றி பெற செய்தார்கள்.

    இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரவண பொய்கை பற்றி?

    இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் சரவண பொய்கை பற்றி?

    இதுவரை குடும்ப படங்களை மட்டுமே இயக்கிய நான் என் மகனை வைத்து எடுத்திருக்கும் காதல் கதைதான் 'சரவண பொய்கை'. இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறோம்!

    காதல் படம் என்றால் கவர்ச்சி இல்லாமலா...

    காதல் படம் என்றால் கவர்ச்சி இல்லாமலா...

    இதுவரை திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பாக நான் இயக்கிய 17 படங்களுக்குமே யு சான்று படங்கள் தான். சரவண பொய்கை படத்திற்கும் ஒரு கட் கூட இல்லாமல் யு சான்று கிடைத்திருக்கிறது.

    நாயகன் கார்ல் மார்க்ஸ்

    நாயகன் கார்ல் மார்க்ஸ்

    கார்ல் மார்க்ஸ், அருந்ததி, விவேக், கருணாஸ், கோவைசரளா, எம்.எஸ்.பாஸ்கர், ஆர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படம் காதல், காமெடி படமாக உருவாகி உள்ளது. விரைவில் படம் திரைக்கு வர உள்ளது,' என்றார் வி.சேகர்.

    English summary
    V Shekar, the director known for family movies is back with a romantic comedy movie titled Saravana Poigai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X