Don't Miss!
- Finance
மோடி அரசு அதிரடி.. 138 பெட்டிங் ஆப், சீன தொடர்புடைய 94 கடன் செயலிகள் தடை..!
- News
தலைக்கேறிய போதை.. மனைவியை கொடூரமாக தாக்கிய மாஜி கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி.. பாய்ந்த வழக்கு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கை முழுவதும் பழிவாங்க துடிப்பார்களாம்... இவங்கள எப்பவும் நம்பாதீங்க...!
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Sports
பார்டர் கவாஸ்கர் கோப்பை - அதிக போட்டிகளில் வென்றது யார்? அதிக ரன்கள் அடித்தது யார்.. முழு விவரம்
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னாது டிராப்பா.. பெரியளவில் பண்ணப் போறோம்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வாடிவாசல் டீம்!
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா 'வாடிவாசல்' படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி பல ஆண்டுகள் ஆகும் நிலையில், அந்த வாடிவாசல் படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாக திடீரென சோஷியல் மீடியாவிலும் சினிமா துறையிலும் ஏகப்பட்ட பரபரப்பு தகவல்கள் வெளியாகி ரசிகர்களையும் சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தின.
இந்நிலையில், உடனடியாக டிராப் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் பெரியளவில் வாடிவாசல் படத்தை பண்ண பிளான் செய்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சூர்யா கமிட்டான அருவா மற்றும் நடித்து வந்த வணங்கான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து டிராப் செய்யப்பட்ட நிலையில், வாடிவாசல் படமும் டிராப் ஆகிறது என்கிற நெருப்பு சினிமா வட்டாரத்தில் புகையத் தொடங்கியது தான் இந்த பிரச்சனைக்கே காரணம் என்கின்றனர்.
முதலில் வணங்கான், இப்போ வாடிவாசல்... விலகும் முடிவில் சூர்யா... அதிர்ச்சியில் வெற்றிமாறன்!

சூர்யா விலகல்
ஹரி இயக்கத்தில் சூர்யா மீண்டும் நடிக்கப் போவதாக அருவா படத்தின் அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியான சில மாதங்களிலேயே படத்தில் இருந்து சூர்யா வெளியேறுவதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த வணங்கான் படத்தில் இருந்தும் சூர்யா மற்றும் 2டி நிறுவனம் விலகுவதாக சமீபத்தில் அதிரடி அறிவிப்பு வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வாடிவாசல் டிராப்பா
வணங்கான் படத்தைத் தொடர்ந்து சூர்யா இன்னமும் ஆரம்பிக்காமல் தள்ளிப் போட்டு வரும் வாடிவாசல் படமும் டிராப் ஆகி விட்டது என கோலிவுட்டில் பேச்சுக்கள் பெருமளவில் கிளம்பிய நிலையில், தயாரிப்பாளர் தாணுவிடம் இருந்து அதற்கு வாய்ப்பே இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரொம்ப இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம்
வாடிவாசல் படம் டிராப் ஆகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அந்த படத்தின் மீது ரொம்ப இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். அதற்கான ஒத்திகைகள், பயிற்சிகள் ஒரு பக்கம் அரங்கேறி வருகின்றன. சூர்யா 42 படம் முடிந்தவுடன் வாடிவாசல் படம் ஆரம்பிக்கும் என தாணு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

விடுதலை பண்ண வேலை
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படம் விஜய்சேதுபதி இணைந்த நிலையில், இரண்டு பாகங்களாக விரிவு அடைந்த நிலையில் தான் வாடிவாசல் படத்தில் கமிட் ஆகாமல் சூர்யா 42 படத்துக்கு நடிகர் சூர்யா சென்று விட்டார் என்றும் விடுதலை படத்தை முடித்து விட்டு வெற்றிமாறன் ஃப்ரீயான உடனே வாடிவாசல் படத்தின் பட வேலைகள் தொடங்கும் என்றும் கூறுகின்றனர்.

சுதா கொங்கரா படம்
திடீரென வாடிவாசல் படம் டிராப் என்கிற சர்ச்சை கிளம்ப காரணமே இந்தி சூரரைப் போற்று படத்தை இயக்குநர் சுதா கொங்கரா முடித்து விட்டு சமீபத்தில் கார் வாங்கிய சந்தோஷத்தை சூர்யாவுடன் கொண்டாடிய நிலையில், சூர்யா 42 படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கப் போவதாக கிளம்பிய தகவல்கள் தான் காரணம் என்கின்றனர். சூர்யா 42 படம் இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், அந்த படம் இன்னும் 3 மாதத்தில் நிறைவடையும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.