Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விடுதலை படத்தால் சிக்கலில் சிக்கிய வாடிவாசல்!
சென்னை : அசுரன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இப்பொழுது விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதுவரை காமெடியனாக வலம் வந்த சூரி விடுதலை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
குறுகிய காலத்தில் விடுதலை படத்தின் படபிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டது ஆனால் இன்னும் படப்பிடிப்பு முடியாமல் இழுத்துக் கொண்டே செல்வதால் வாடிவாசல் தொடங்க தாமதமாகிறது.
தேசிய விருது

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் விருதுகளுக்கு பஞ்சமில்லாமல் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. ஆடுகளம் படத்திற்கு பிறகு கடைசியாக வெளியான அசுரன் திரைப்படமும் தேசிய விருது வென்றுள்ளது. இந்த நிலையில் வெற்றிமாறன் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பு இருக்க அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் உருவாகும் வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார்.
சூரி கதாநாயகனாக

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்காக சூர்யா ஒரு மாதம் ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வாடிவாசல் படத்தின் முதல் கட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு கொரோனா பரவல் காரணமாக தடைபட்டது . இந்த இடைவெளியில் குறுகிய காலத்தில் சூரி கதாநாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை வெற்றிமாறன் இயக்க முடிவு செய்தார். முற்றிலும் காட்டு பகுதியில் நடைபெறும் இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்க விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு தள்ளிப் போக

விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தாறுமாறு செய்த நிலையில் குறுகிய கால கட்டத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. முற்றிலும் காட்டுப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுவதால் படப்பிடிப்பு மேலும் தாமதமாவதாக கூறப்படுகிறது. எனவே விடுதலை படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தான் முடியும் என தெரிகிறது. இதனால் வாடிவாசல் படப்பிடிப்பும் தொடங்க மேலும் சில மாதங்கள் தள்ளிப் போக வாய்ப்புள்ளது.