»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தெனாலி படத்தின் பாடலாசிரியர்கள் பெயர் விளம்பரங்களில் வெளியிடப்படாமல்,இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு கவிஞர் வாலி வருத்தம் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் படத் தயாரிப்பாளர்களுக்குபேடன்ட் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. டெல்லியைத்தலைமையிடமாகக் கொண்ட இந்திய பெர்பார்மிங் டைரக்டர்ஸ் சொசைட்டி இதற்குஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்ச்சியில் கவிஞர் வாலி பேசுகையில் தெனாலி நாயகன் கமல்ஹாசன் மீதும்ஆவேசப்பட்டார். வாலியின் கனல் பேச்சு:

பாட்டுக்களைத் திருடுவதைக் கண்டுபிடிப்பது ரொம்ப சிரமம். உண்மையில்சொல்வதானால், என் பாட்டுக்களில் கூட கண்ணதாசன் பாதிப்பு இருக்கும். அதற்காகஅதை திருட்டு என்று சொல்லி விட முடியாது. கண்ணதாசனின் தாக்கம் என்று தான் கூறவேண்டும். எதார்த்தமாக வந்தவை அவை.

காப்பியடிக்கும் கவிஞனால் ரொம்ப நாள் பீல்டில் இருக்க முடியாது. முன்பெல்லாம் ஒரு டீகுடிக்கக் கூடாது இயலாத நிலை கவிஞர்களுக்கு இருந்தது. இப்போது ராயல்டி என்றபெயரில் ராயல் டீ கிடைத்துள்ளது.

முன்பு பாட்டுக்குத்தான் இசையமைப்பாளர்கள் மெட்டு போடுவார்கள். இப்போதுதலைகீழாகி விட்டது. எம்.எஸ்.விஸ்வநாதனுக்குப் பிறகு பாட்டுக்கு மெட்டு போடும் ஒரேநபர் தேவாதான். இதைச் சொல்ல எனக்குப் பயமில்லை. தேவாவை நம்பியே இனிமேல்கவிஞர்கள் இருக்க வேண்டும்.

என்னைப் பொருத்தவரை, பாட்டு எழுதுகிறவனும், அதற்கு இசை அமைக்கிறவனும்,அந்தப் பாட்டின் தாய், தந்தை மாதிரி. இரண்டு பேரும் நன்றாக இருந்தால்தான் குழந்தையும்நன்றாக இருக்க முடியும்.

வைரமுத்துவோடு நல்ல கவிஞர்கள் நின்று விட்டார்கள். காரணம், அவருக்குப் பிறகு வந்தகவிஞர்களை இசையமைப்பாளர்கள் சரியாக ஆதரிக்காததே.

தெனாலி படத்தில் நான்கு, ஐந்து கவிஞர்கள் பாட்டு எழுதினார்கள். ஆனால் விளம்பரத்தில்அவர்கள் யார் பெயரையும் காணவில்லை. இது வேதனையைத் தருகிறது. இது நியாயமா?கமல்ஹாசனும் இதற்குத் துணை போயிருக்கிறார். இது தர்மமா?

நன்றாக எழுதும் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் வெளியில்தெரிவதில்லை என்றார் வாலி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil