»   »  வழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு?

வழக்கெல்லாம் தீர்ந்திடுச்சாமே.. அப்போ நிஜமாகவே வரப் போகுதா வாலு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு நடித்துள்ள வாலு படத்துக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், படம் நிச்சயம் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மூன்று ஆண்டுகளாக சிம்புவின் படம் எதுவும் வரவில்லை. அவர் நடித்த 4 படங்களில் வாலு தயாராக இருந்தும் வழக்குகளில் சிக்கிக் கொண்டது. மற்ற மூன்று படங்கள் அரைகுறையாக நிற்கின்றன.

இந்த 2015 ம் ஆண்டு சிம்பு நடித்த படங்களில் எதுவும் வெளிவராதா என்ற அவரது ரசிகர்களின் கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, சிம்புவின் நடிப்பில் வாலு திரைப்படம் வெளிவரும் என்று அறிவிக்கப் பட்டது.

படம் வெளிவர இருந்த நேரத்தில் இடையில் புகுந்த மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கொன்றைப் போட, படம் தடைபட்டு நின்றது.

வாலு வெளியாகாத வருத்தத்தில் ஒரு வாலிபர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூட கிளப்பிவிட்டார்கள்.

இந்த நிலையில் மேஜிக் ரேஸ் நிறுவனம் வழக்கை வாபஸ் பெறப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன, இதனால் இன்னும் 3 வாரத்துக்குள் படம் கண்டிப்பாக வெளியாகி விடும் என்று கூறுகிறார்கள்.

தேதி அறிவித்தால் கூட படம் வெளியாவதை உறுதியாகச் சொல்ல முடியாத சூழல் அல்லவா... அதனால் வெளியான பிறகுதான் உறுதியாகச் சொல்ல முடியும், வாலு விஷயத்தில்!

English summary
Magic Rays Withdraws case Filed Against Vaalu Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil