»   »  வாலு படத்தில் என்ன தான்யா இருக்கு: ரூம் போட்டு யோசிக்கும் ரசிகர்கள்

வாலு படத்தில் என்ன தான்யா இருக்கு: ரூம் போட்டு யோசிக்கும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு படம் எப்பொழுது வேண்டுமானாலும் ரிலீஸாகட்டும். அதில் அப்படி என்ன தான் உள்ளது என்பதை பார்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு ரசிகர்கள் வந்துள்ளனர்.

புதுமுக இயக்குனர் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ள படம் வாலு. எது சிம்புவும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்து பல காலமாக ரிலீஸாகாமல் உள்ளதே அந்த படமா என்று கேட்டால் ஆமாம் அதே படம் தான். படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது அறிவிக்கப்படுவதும், பின்னர் அந்த தேதி தள்ளி வைக்கப்படுவதுமாக உள்ளது.

இந்நிலையில் தான் படம் வரும் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்றார்கள்.

'தல' பிறந்தநாள்

'தல' பிறந்தநாள்

நான் 'தல' ரசிகன்டா என்று மார்தட்டும் சிம்புவின் படம் அவருக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாள் அன்று ரிலீஸ் ஆகிறதே என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மே மாதம் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்பொழுதாவது?

இப்பொழுதாவது?

மே 1ம் தேதி என்றீர்கள் தற்போது மே 9 என்கிறீர்கள் எப்பொழுது தான் பாஸ் அந்த படத்தை ரிலீஸ் செய்வீர்கள் என்று நாங்கள் அல்ல சிம்பு ரசிகர்கள் கேட்கிறார்கள். சிம்பு படத்தை பார்த்து பல காலம் ஆகிவிட்டது. அறிவித்தபடி மே 9ம் தேதியாவது படம் ரிலீஸாகட்டும் என்று முணுமுணுக்கிறார்கள் ரசிகர்கள்.

கதை

கதை

வாலு என்ற பெயரைக் கேட்டதுமே படம் இழுத்துக் கொண்டே போனது, ரிலீஸ் தேதி தள்ளிக் கொண்டே போவது தான் அனைவருக்கும் நினைவுக்கு வருகிறது. படத்தின் கதை என்னவென்று யாரும் கண்டு கொள்வதாக இல்லை.

பிரிந்த ஜோடி

பிரிந்த ஜோடி

வாலு படத்தில் நடிக்கையில் காதலில் விழுந்த சிம்புவும், ஹன்சிகாவும் பிரிந்துவிட்டார்கள். ஆனால் படத்தின் புகைப்படங்களை பார்த்தால் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி கண்டமேனிக்கு ஒர்க் அவுட்டாகியுள்ளது தெரிகிறது.

சந்தானம்

சந்தானம்

என்னை வளர்த்துவிட்டவர் என்று சிம்புவை பற்றி அடிக்கடி பெருமையாக பேசி வரும் சந்தானம் வாலு படத்தில் நடித்துள்ளார். சிம்பு படம் என்றால் விடிவி கணேஷ் இல்லாமலா. இங்க என்ன சொல்லது... அவரும் இருக்கிறார்.

விளம்பரம்

விளம்பரம்

படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது, சிம்பு-ஹன்சிகா காதலில் விழுந்தது, காதல் முறிந்தது கூட படத்திற்கு விளம்பரமாக அமைந்துவிட்டது. இதற்கிடையே சிம்பு வேறு தானும், ஹன்சிகாவும் பிரிய தனிப்பட்ட பிரச்சனை காரணம் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fans have decided to watch Simbu starrer Vaalu whenever it hits the screen.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil