»   »  சிம்பு தாறுமாறாக இருக்கிறார் - வாலுவை வாழவைத்த ரசிகர்களின் பதிவுகள்

சிம்பு தாறுமாறாக இருக்கிறார் - வாலுவை வாழவைத்த ரசிகர்களின் பதிவுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாலு படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதை பாராட்டியும், புகழ்ந்தும் செய்தி போட்டு குவிக்கிறார்கள்.

3 வருடங்களிற்கு முன்பு எடுத்த படம் இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா, இதற்கு நாம் பதில் சொல்லுவதை விட ஏற்கனவே படத்தைப் பார்த்து தங்கள் 3 வருட தவம் பலித்து விட்ட சந்தோஷத்தில் இருக்கும் ரசிகர்கள் பதில்களை பார்க்கலாம்.


வாலு படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள் சிலரின் ட்விட்டர் பதிவுகள் இவை.....


அஜீத் விருந்து- ஊறுகாய் விஜய்

விருந்து முழுக்க(வாலு) அஜீத் ரசிகர்களுக்காக, ஊறுகாயை மட்டும் விஜய் ரசிகர்களுக்கு கொடுத்து விட்டார் சிம்பு என்று சற்று காரசாரமாக பதிவிட்டிருக்கிறார் கணபதி.
மோதினா அடி- கஷ்டம்னா உதவி

மோதினா அடிவிழும் கஷ்டம்னா உதவி வரும் என்று துப்பாக்கி படத்துடன் போட்டியிட்டு போடாபோடி தோற்றதையும், வாலு படத்திற்கு விஜய் உதவி செய்ததையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் லோகேஸ்வரன். அது சரி...


முதல் பாதி சூப்பர்

முதல் பாதி நன்றாக இருக்கிறது, ஆண்டவா இரண்டாவது பாதி சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுதல் வைத்திருக்கிறார் பாலா. கடவுள் வேண்டுதலை நிறைவேற்றுனாரா அப்படின்னு மறக்காம சொல்லிட்டு போங்க பாலா.
தியேட்டரே சும்மா அதிருதுல்ல

தலயாக வந்த வாலு (அட) தியேட்டரே அதிருதுப்பா இது கார்த்தியின் பதிவு.


உங்க ஏரியாவுலயே சிக்ஸர்

உங்க ஏரியாவுலயே சிக்ஸர் அடிச்சு சத்தமில்லாம நடுவுல வந்துட்டோம் பார்த்தீங்களா என்று கேள்வி கேட்டிருக்கிறார் வீஜே மஜிக்.


3 ஆண்டுகள் துளியும் தொய்வில்லை

3 ஆண்டுகள் ஆனபோதும் சிம்புவின் இளமையும், துள்ளலும் இன்றைய தினத்திற்கு ஏற்றவாறே இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ராம்.


வானத்தைப் போல - சந்தானம்

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்களோ , வாலுவோ ஹீரோ சந்தானம் தான் என்று கூறியிருக்கிறார் ராஜ்.


வாலு - தூளு

படத்தில் எம்ஜிஆர், ரஜினி, அஜீத் தோற்றங்களில் சிம்பு தோன்றும் தாறுமாறு பாடல் நன்றாக இருக்கிறது, 2 ம் பாதி விறுவிறுப்பு என்று படத்தை அன்லிமிடெட்டாக லைக் செய்திருக்கிறார் உத்தமன்.


வாசுவும் வாலுவும் ஒண்ணா ரிலீஸ் ஆனவங்க

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்களா இருக்கலாம், ஆனா வாசுவும் வாலுவும் ஒண்ணா ரிலீஸ் ஆனவங்க என்று நிலமையை சுருக்கமாக சொல்லியிருக்கிறார் விக்னேஸ்வரன்.


மொத்தத்தில் வாலு சிம்பு ரசிகர்களுக்கான தலைவாழை விருந்து...Read more about: vaalu, simbu, hansika, santhanam, fans
English summary
Simbu's Vaalu Movie Today Released - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil