»   »  சிம்புவின் வாலுவும் சில விளம்பரங்களும்

சிம்புவின் வாலுவும் சில விளம்பரங்களும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 வருடங்களிற்குப் பின் இன்று ஒரு வழியாக......வெளியாகியிருக்கிறது சிம்புவின் வாலு திரைப்படம், என்னதான் நல்ல படத்தை எடுத்திருந்தாலும் படம் வெளியிடுவதற்கு முன்பு விளம்பரம் கண்டிப்பாக அத்திரைபடத்திற்கு தேவைப்படும்.

ஆனால் வாலு விஷயத்தில் படம் வருமா வராதா என்பதே பெரிய விளம்பரமாக அமைந்து விட்டதால், படத்திற்கு என்று தனியாக விளம்பரம் எதுவும் தேவை இல்லாமல் போய்விட்டது.


இது மட்டுமின்றி வேறு எந்தெந்த வழியில் எல்லாம் வாலுவை மறைமுகமாக விளம்பரப்படுத்தியிருக்கின்றனர் என்று பார்த்தால் ஒரு பெரிய பட்டியலே போடலாம். அந்த அளவிற்கு வாலு திரைப்படத்திற்கு மறைமுகமாக விளம்பரம் கிடைத்திருக்கிறது.


அவை எந்த மாதிரியான விளம்பரங்கள் என்று பார்க்கலாம்.


தொடர் சிக்கல்

தொடர் சிக்கல்

வாலு எந்த நேரத்தில் தொடங்கியதோ சிம்புவின் திரை வாழ்க்கையையே ஒரு ஆட்டு ஆட்டி வைத்து விட்டது. படம் வெளியாகும் நேரத்தில் எல்லாம் சொல்லிவைத்தது போன்று யாராவது பிரச்சினை செய்ய, படம் வெளியாகுமா? வெளியாகாதா என்பதே ஒரு கேள்விக்குறியாகி விட்டது.


வெளியாகுமா?வெளியாகதா?

வெளியாகுமா?வெளியாகதா?

படம் வெளியாகுமா ஆகாதா என்பதே ஒரு பெரிய விளம்பரமாக படத்திற்கு மாறிவிட்டது, ஒரு சிலர் படம் இந்த அளவிற்கு பிரச்சினைகளில் சிக்குகிறதே அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் படத்தில் என்று ஆர்வமாக காத்திருக்க ஆரம்பித்து விட்டனர். இதை விடவும் வேறு விளம்பரம் வேண்டுமா? என்ன.


உதயநிதியுடன் மோதிய சிம்பு

உதயநிதியுடன் மோதிய சிம்பு

வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு வாலுவை வெளியிட முடியாமல் உதயநிதி தடுக்கின்றார் என்று ட்விட்டரில் மறைமுகமாக சிம்பு குற்றம் சாட்டினார். வெடித்துப் பொங்கிய உதயநிதி நான் யாருக்கும் எதிரானவன் அல்ல என்று பதிலுக்கு கொஞ்சம் காரசாரமாக எகிற..அப்புறம் என்ன வாலுவிற்கு ப்ரீ விளம்பரம் தான்.


அஜீத் ரசிகன்

அஜீத் ரசிகன்

வாலு படத்தில் அஜீத் ரசிகனாக சிம்பு நடித்திருக்க, அஜீத் ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் படத்திற்கு கிடைத்தது. வாலுவிற்கு பைசா செலவில்லாமல் கிடைத்த மாஸான விளம்பரம் இது.


உடன்பிறவா சகோதரர்

உடன்பிறவா சகோதரர்

கடைசி நேரத்தில் பணப்பிரச்சினை வந்தபோது நடிகர் விஜய் தலையிட்டு அதைத் தீர்த்து வைக்க என் கூடப் பிறக்காத சகோதரர் விஜய், என்று சிம்பு ஸ்டேட்டஸ் தட்ட வாலு விளம்பரம் பளிச்சென்று விஜய் ரசிகர்களிடம் ஒட்டிக் கொண்டது.


தளபதிக்கு நன்றி

தளபதிக்கு நன்றி

சிம்புவின் உருக்கமான ஸ்டேட்டஸால் நெகிழ்ந்து போன விஜய் ரசிகர்கள் பதிலுக்கு நாம எதாவது சிம்புவுக்கு செய்யணுமே என்று கூட்டம் கூட்டமாக கொடி பிடித்து வாலு திரைப்படம் பார்க்க தியேட்டருக்குச் சென்றனர். சென்ற இடத்தில் படத்தின் டைட்டில் கார்டில் விஜய்க்கு நன்றி என்று வாலு தொடங்க இந்த விஷயத்தை பட்டி தொட்டியெங்கும் பரப்பி, இந்திய அளவில் வாலு திரைப்படத்திற்கு விளம்பரம் செய்து விட்டனர் விஜய் ரசிகர்கள்.


சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

விஜய், அஜீத் ரசிகர்களைக் கவர்ந்த சிம்பு ட்விட்டர் புரோபைல் படமாக ரஜினியை வைத்து அவரின் புகழ்பெற்ற வசனம் ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வைக்க ரஜினி ரசிகர்களின் ஆதரவும் வாலுவிற்கு கிடைத்தது. தொடர்ந்து இதனை உறுதி செய்வது போல ரஜினி போன் செய்து சிம்புவிற்கு வாழ்த்து சொல்ல படத்திற்கு பரம், பரம் விளம்பரம்தான்.


ஹைலைட் விளம்பரம் இதுதான்

தனுஷ் யூடியூப்பை பயன்படுத்தி விளம்பரம் செய்தார், ஆனால் சிம்பு ட்விட்டரில் 4 வார்த்தை ஸ்டேட்டஸ் போட்டே வாலு படத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் விளம்பரம் செய்து பார்க்க வைத்து விட்டார்.இன்று காலையில் காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு நேராக ரஜினி வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆசி பெற்று வந்திருக்கிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சற்று முன்பு சிம்பு பதிவிட படம் இப்போ 2 நாளைக்கு தமிழ்நாடு முழுவதும் ஹவுஸ்புல் னு நியூஸ் வருது..English summary
Today Simbu's Vaalu Movie Released, Rajini, Ajith and Vijay Fans Supporting This Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil