»   »  வாலு கண்டிப்பாக வெளியாகும் – பிரார்த்தனையில் குதித்த சிம்பு ரசிகர்கள்

வாலு கண்டிப்பாக வெளியாகும் – பிரார்த்தனையில் குதித்த சிம்பு ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிம்பு நடித்த வாலு படத்தின் மீதான தீர்ப்பு இன்று உயர்நீதிமன்றத்தில் வெளியாக இருக்கிறது, ஏற்கனவே பல தடைகளைக் கடந்த வாலு திரைப்படம் இந்தத் தடையையும் கடந்து சொன்னபடி கண்டிப்பாக வெளியாகுமா?

என்ற கேள்வி சிம்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது, வாலு படத்திற்கு ஆதரவாக கண்டிப்பாக தீர்ப்பு வழங்கப்படும் என்று சிம்புவும் அவரது அப்பா டி.ராஜேந்தரும் உறுதியாக நம்புகின்றனர்.


ஆனால் தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் அதனை ஏற்றுக் கொள்வேன் என்று டி.ராஜேந்தர் ஏற்கனவே கூறியிருக்கிறார், இந்நிலையில் வாலு படம் வெளியாக வேண்டி தீவிர வேண்டுதல்களில் குதித்து இருக்கின்றனர் சிம்பு ரசிகர்கள்.


முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

முருகன் கோவிலில் சிறப்பு பூஜை

ஜித் என்னும் ரசிகர் தலைவா வாலு படம் கண்டிப்பாக வெளியாகும், அதற்காக முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்து இருக்கிறோம். எல்லாம் நல்லா நடக்கும் நல்லதே நடக்கும் நாங்கள் இருக்கிறோம் உங்களுக்காக தலைவா என்று கூறியிருக்கிறார்.


ரஜினியின் வார்த்தைகளை நினைவூட்டுகிறேன்

வினோ என்பவர் தலைவா நான் உங்களுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினியின் வார்த்தைகளை நினைவூட்ட விரும்புகிறேன், சோதனைய சந்திச்சா தான் சாதனை ஆகும் என்று கூறியிருக்கிறார்.


சிவன் இருக்காரு

பிரெட்ரிக் என்பவர் எல்லாம் நல்லதே நடக்கும் நமக்கு அந்த சிவன் இருக்காரு அவர் எல்லாத்தையும் பார்த்துப்பாரு என்று சிம்புவுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.


அனைத்துக் கடவுள்களின் ஆசிர்வாதம்

மதுரையைச் சேர்ந்த தினேஷ் எல்லாம் நல்லதே நடக்கும் கவலைப்படாதீர்கள் அண்ணா, என்று அனைத்து கடவுள்களின் படங்களையும் போட்டு நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.


வாலு கண்டிப்பாக வெளியாகும்

ஸ்ரீதேவி என்னும் ரசிகை இன்று 4 மணிக்கு வாலு படத்தின் மீதான தீர்ப்பு வெளியாகிறது, வாலு படம் கண்டிப்பாக வெளியாகும் என்று நம்பிக்கையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.


என்ன நடந்தாலும் எங்களின் அன்பு மாறாது

படம் ரிலீஸ் ஆவது, ஹிட் கொடுப்பது இதெல்லாம் நடந்தாலும் நடக்காவிடினும் அது பெரிய விஷயம் இல்லை. எங்களின் அன்பு அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையில் உள்ளது போன்ற ஒரு தூய்மையான அன்பு, இது என்றும் மாறாது. மேலும் நாங்கள் எப்பொதும் உங்களுடன் இருப்போம் என்று கூறியிருக்கிறார்.


தீவிர உழைப்பு என்றும் தோற்காது

எல்லாவற்றிலும் ஹைலைட் இதுதான் கடுமையான உழைப்பு என்றும் தோற்பது கிடையாது என்று சிம்பு சிவனை வணங்குவது போன்ற புகைப்படத்தைப் போட்டு ஆறுதல் கூறியிருக்கிறார் செழியன் என்னும் ரசிகர்.


English summary
Vaalu Movie Issue- Today Evening Court judgement Released, Now Simpu Fans Praying For Temples.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil