»   »  காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு... டிவிட்டரில் டிரெண்டானது!

காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு... டிவிட்டரில் டிரெண்டானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 3 வருடப் போராட்டத்திற்குப் பின் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் வாலு, சிம்பு ஹன்சிகா, சந்தானம், ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார்.

வாலு முதல் நாள் சிறப்புக் காட்சி காசி தியேட்டரில் காலை 8.05 மணிக்கு திரையிடப்படும் என்று அறிவித்து இருந்தனர், மேலும் அந்தக் காட்சியில் ரசிகர்களுடன் சிம்பு படம் பார்க்கிறார் என்றும் கூறியிருந்தனர்.


இதனை சிம்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.ஆனால் திட்டமிட்டபடி சிறப்புக் காட்சி காசி தியேட்டரில் இன்று காலை திரையிடப்படவில்லை, இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் கேட்டபோது படத்தை திரையிடுவதற்கான உரிமம் இன்னும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று கூறினர்.இதனைத் தொடர்ந்து முதல் காட்சி சற்று முன்பு 10 மணியளவில் தொடங்கியது, நடிகர் சிம்பு மற்றும் ஜெய் இருவரும் ரசிகர்களுடன் அமர்ந்து வாலு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.படத்தைப் பார்க்க வந்த சிம்புவிற்கு ரசிகர்கள் ஆராவாரமான வரவேற்பு அளித்து உள்ளே கூட்டிச் சென்றனர், வாலு டைட்டில் கார்டில் விஜய் செய்த உதவிக்கு நன்றி என்று கூறுவது போன்று படம் தொடங்குகின்றது.


அஜீத்தின் ரசிகனாகவும் சிம்பு இந்தப் படத்தில் நடித்திருப்பதால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் வாலு படத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


சிம்பு தனது ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பதால் தற்போது இந்திய அளவில் காசி தியேட்டர், ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கின்றது.


படம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்குமா? பார்க்கலாம்...


English summary
Vaalu First Show in Kasi Theatre, Simbu See the Film with his Fans.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil