»   »  டிவிட்டரில் மீண்டும் "வாலு" ரசிகர்களின் டிரெண்ட் கொண்டாட்டம்...!

டிவிட்டரில் மீண்டும் "வாலு" ரசிகர்களின் டிரெண்ட் கொண்டாட்டம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு வழியாக சுதந்திர தினத்தில் திரைக்கு வருகிறது வாலு, பல வெளியீட்டுத் தேதிகளை பார்த்த வாலு இந்த சுதந்திர தினத்திற்கு ஒரு வழியாக வெளியாக இருக்கிறது.

3 வருடப் போராட்டம் முடிவுக்கு வந்ததில் சிம்பு டி.ராஜேந்தர் மட்டுமின்றி சிம்புவின் ரசிகர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் ஆகஸ்ட் 14 ம் தேதியில் திரையைத் தொடுகிறது வாலு.

ஏராளமான வழக்குகளை படம் சந்தித்திருப்பதால் படத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து இருக்கிறது, இந்நிலையில் சிம்புவின் ரசிகர்கள் ட்விட்டரில் #VaaluOnAugust14 என்ற ஹெஷ்டேக்கை உருவாக்கி வாலு படத்தை ட்ரெண்டடிக்க வைத்திருக்கின்றனர்.

ட்விட்டரை கலக்கும் சிம்பு ரசிகர்களின் ட்வீட்டுகளில் இருந்து சிலவற்றை இங்கு காணலாம்.

3 வருடங்கள்

"3 வருடங்கள் எதிர்பார்த்த வாலு திரைப்படம் இன்னும் 2 நாட்களில் வெளியாக இருக்கிறது படத்தில் 1 நட்சத்திரம் (சிம்பு) நடித்திருக்கிறார்" என்று எண்களில் வாலு படத்தின் வெளியீட்டைப் பற்றி கூறியிருக்கிறார் விக்ரம் கிரிஷ் என்னும் ரசிகர்.

தல டிக்கெட் ரெடி

"தல டிக்கெட் எடுத்துட்டேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்று மகிழ்ச்சியுடன் தனது டிக்கெட்டையும் இணைத்து ட்வீட்டி இருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த சிலம்பு என்னும் ரசிகர்.

வாலு வேற மாதிரி

வாழ்த்துக்கள் சகோதரா வாலு கோரியோகிராபி நன்றாக இருக்கிறது, ஏற்கனவே சிம்பு நல்ல டான்சர் வாலு படத்தில் டான்ஸ் இன்னும் வேற மாதிரி இருக்கிறது என்று சசிகணேஷ் என்னும் ரசிகர் கூறியிருக்கிறார்.

முன்பதிவு ஆரம்பமாகி விட்டது

திருச்சி சிம்பு ரசிகர்கள் கவனத்திற்கு காவேரி தியேட்டரில் முன்பதிவு ஆரம்பமாகி விட்டது என்று ரசிகர்களை திருச்சி அலெர்ட் செய்திருக்கிறார் பிரகாஷ் என்னும் ரசிகர்.

வந்துட்டோம்ல

வாலு திரைப்படம் வெளியாவது குறித்து "அதான் வந்துட்டோம்ல என்று பாகுபலி பிரபாசாக மாறி மீம்ஸ் உருவாக்குபவர்களையும், எதிர்ப்பாளர்களையும் எஸ்டிஆர் துவம்சம் செய்வது போல (என்ன ஒரு ஆசை) படம் வெளியிட்டு வந்துட்டோம் என்று பெருமையுடன் ட்வீட் செய்திருக்கிறார் சொர்ணக்குமார் என்னும் ரசிகர்.

இதைப் போன்ற ஏராளமான ட்வீட்டுகளால் நிரம்பி வழிகிறது வாலு படத்தின் வெளியீடு குறித்த ஹெஷ்டேக், நீங்க நடத்துங்க...

English summary
Vaalu Movie Released August 14 - Fans Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil