பிரபுதேவா படத்தில் இணையும் வாணி போஜன்...இதிலாவது காட்டுவீங்களா?
சென்னை : பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படத்திலாவது வாணி போஜன் நடிக்கும் சீன்களை காட்டுவார்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
வால்டர் படத்தை இயக்கிய டைரக்டர் அன்பு இயக்கும் கிரைம் த்ரில்லர் படத்தில் பிரபு தேவா நடிக்க போவதாக இந்த ஆண்டின் துவக்கத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு ரேக்லா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தில் நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அவரின் கேரக்டர் பற்றிய விபரங்களையும் டைரக்டர் வெளியிட்டுள்ளார்.

பிரபுதேவாவிற்கு 2 ஜோடி
இது பற்றி டைரக்டர் அன்பு கூறுகையில், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள். அதில் ஒன்றாக வாணி போஜனை தேர்வு செய்துள்ளோம். அவரது நடிப்பை ஓ மை கடவுளே உள்ளிட்ட பல படங்களில் பார்த்துள்ளேன். அவர் யதார்த்தமாக நடிக்கக் கூடியவர். அவரைப் போன்ற ஒருவர் தேவை என மனதில் வைத்து தான் அந்த கேரக்டரை உருவாக்கினேன்.

வாணி போஜன் கேரக்டர் இதுவா
இந்த படத்தில் வாணி நர்ஸ் ரோலில் நடிக்கிறார். அவரது கேரக்டர் படத்திற்கு மிகவும் முக்கியம். நல்ல வெயிட்டான ரோலும் கூட. மற்றொரு ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அழகான ஹீரோயின்களை விட அழுத்தமான கேரக்டர்கள்தான் இந்த படத்தை முன்னெடுத்து செல்லும். இன்னொரு ஹீரோயின் யார் என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.

அட இது தான் படத்தின் கதையா
இந்த படத்தின் ஷுட்டிங் சென்னையில் துவங்கி விட்டதாம். இது தவிர கிராமத்தில் நடைபெறுவதை போன்ற காட்சிகளும் உள்ளதாம். இவற்றை புதுப்பேட்டை பகுதியில் எடுக்க திட்டமிட்டுள்ளார்களாம். கிராமத்தில் வாழும் நபர் தன்னுடைய தேவைக்காக நகரத்திற்கு வருவதை போன்ற கதை. இது ரேக்லா ரேஸ் பற்றிய கதை அல்ல.

க்ளைமாக்சே இவ்வளவு நேரமா
பிரபுதேவாவின் கேரக்டர் ரேக்லா மாடுகளை பராமரிப்பது. இதில் தற்போது சமூக பிரச்சனைகளும் சேர்த்து சொல்லப்பட்டிருக்கும். க்ளைமாக்ஸ் காட்சிகள் 20 நிமிடங்கள் கொண்டதாக அமைக்கப்பட உள்ளதாம். பல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது என்றார் டைரக்டர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இதுலயாவது காட்டுவீங்களா
இதை கேட்டதும், எல்லாம் ஓகே தான். இந்த படத்திலாவது வாணி போஜன் நடிக்கும் காட்சிகளை காட்டுவீர்களா. இல்லை நீங்களும் மகான் படத்தை போல் வாணி போஜன் நடித்த காட்சிகளை நீக்கி விடுவீர்களா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். மகான் படத்தில் சிம்ரனை பிரிந்த விக்ரம், வாணி போஜன் சில காலம் வாழ்வதை போல் கதையை வைத்து படம் எடுத்தார்கள். ஆனால் படத்தின் நீளம் கருதி, வாணி போஜன் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு, ஓடிடியில் படத்தை ரிலீஸ் செய்திருந்தனர். வாணி போஜன் வரும் சீன்களை பார்க்க ஆவலாக காத்திருந்த ரசிகர்கள் கடைசியில் ஏமாற்றம் அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











