»   »  ரூ 6 கோடி மோசடிப் புகார்.... நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிய உச்ச நீதிமன்றத்தில் மனு!

ரூ 6 கோடி மோசடிப் புகார்.... நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிய உச்ச நீதிமன்றத்தில் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நட்சத்திர கிரிக்கெட்டில் ரூ 6 கோடி வரை மோசடி நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உத்தரவிடக் கோரியும் வாராகி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ள மனு விபரம்:

Vaaragi files petition at Supreme court against Nadigar Sangam

கடந்த ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற 'பாண்டவர் அணி' என அழைக்கப்பட்ட நடிகர்கள் நாசர், விஷால், கார்த்திக், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 23, 29 தேதிகளில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் பெயரில் ரூ.6 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் நிர்வாகத்துக்கு கடந்த ஏப்ரல் 7, ஆகஸ்ட் 8 ஆகிய தேதிகளில் கடிதம் எழுதினேன். சைதாப் பேட்டையில் உள்ள மாவட்டப் பதிவாளருக்கும் கடிதம் எழுதினேன். அக் கடிதத்தை தமிழகத் தலைமைப் பதிவாளருக்கும் அனுப்பினேன்.

அதற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் அளித்த பதிலில், "சங்கத்தில் அனைத்தும் முறையாக செயல்படுகிறது. மேலும் விவரங்களுக்கு நேரில் வர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டது. சங்க அலுவலகம் சென்ற போது என்னை சங்க நிர்வாகிகள் கடுமையாகத் தாக்கினர்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நான் அளித்த புகாரை பதிவு செய்ய காவல் துறையினர் மறுத்தனர். இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யவும், புகார் தொடர்பாக விசாரணை நடத்தவும் சென்னை நகர காவல் துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்," என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Vaaragi, a person called himself as journalist has filed a petition in Supreme Court to take action against the present governing body of Nadigar Sangam including Nasser and Vishal for misappropriation of funds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil