»   »  ஆகஸ்ட் 14-ல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ரிலீஸ்!

ஆகஸ்ட் 14-ல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆர்யாவின் 'தி ஷோ பீப்பல்' தயாரிக்கும் திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ராஜேஷ் எம் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

சுருக்கமாக 'விஎஸ்ஒபி' என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ராஜேஷ் மூவரின் வெற்றி கூட்டணி மீண்டும் இப்படத்தில் இணைகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மீண்டும் சந்தானத்துடன் கூட்டணி அமைத்த மகிழ்ச்சியை நம்மிடையே இப்படிப் பகிர்கிறார் ராஜேஷ் எம்..

"காதல், ஃப்ரெண்ட்ஷிப், காமெடிதான் நம்ம ஏரியா. மக்களும் நம்மிடம் இருந்து அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அதையே செய்வதுதான் நமக்கும் உத்தமம்.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

வாசுவும் சரவணனும் சிறு வயதிலிருந்து நண்பர்கள். இவர்கள் இடையே பெண்களால் ஏற்படும் விளைவுகளை மிக கலாட்டாவாக சொல்லியிருக்கிறோம். படம் முழுக்க இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் நிஜ வாழக்கையில் எப்படி கலாய்த்து கொள்வார்களோ அதே இயல்புடன் வருகிறார்கள் ஆர்யாவும் சந்தானமும் வருகிறார்கள்.

"ரசிகர்கள் அனைவரையும் டீசர் கவர்ந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. படத்தின் ஒற்றை பாடல் வரும் ஜூலை 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. நிரவ் ஷா ஒளிப்பதிவில், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு மேற்கொள்ள, டி இமானின் இசையமைப்பில் உருவாகியுள்ளது விஎஸ்ஓபி.

Vaasuvum Saravananum Onna Padichavanga from Aug 14

ஆகஸ்ட் 14ஆம் தேதி மக்கள் மகிழ்ந்திட திரையரங்குகளில் விஎஸ்ஓபி வெளியாகவுள்ளது. உங்கள் நண்பர்களோடு நீங்கள் கழித்த அந்த ஜாலியான நாட்களை இந்த ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' மீண்டும் நினைவில் நிறுத்தும்," என்றார்.

English summary
Arya's Vaasuvum Saravananum Onna Padichavanga movie will be released on Aug 14
Please Wait while comments are loading...