தனுஷ் கூட அந்த பயத்தோடவே நடிச்சேன்.. என்ன வாத்தி ஹீரோயின் சம்யுக்தா மேனன் இப்படி சொல்லிட்டாரே!

சென்னை: திருச்சிற்றம்பலம் படம் வெற்றியை தொடர்ந்து தனுஷ் ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக வாத்தி மற்றும் நானே வருவேன் படங்களின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

Recommended Video

Thiruchitrambalam | Kutty Story சொன்ன Dhanush, Audio launch சுவாரஸ்யம்! *Kollywood

தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவல் படமாக நடிகர் தனுஷ் டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி தனுஷ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பான் வேர்ல்ட் ஸ்டார்

பான் வேர்ல்ட் ஸ்டார்

நடிகர் தனுஷ் உடன் வாத்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றே தான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்றும், எதேச்சையாக ஹைதராபாத்துக்கு ஆடிஷனுக்கு சித்தாரா புரொடக்‌ஷன் நிறுவனம் அழைத்த நிலையில், தனுஷ் படம் என்று தெரிந்ததும் உடனடியாக ஓகே சொல்லி விட்டேன். தனுஷ் பான் இந்தியா நடிகர்கள் எல்லாம் இல்லைங்க பான் வேர்ல்ட் ஸ்டார் என அந்த பேட்டியில் பேசி ஒட்டுமொத்த தனுஷ் ரசிகர்களின் மனங்களிலும் இடம் பிடித்து விட்டார்.

அந்த பயத்தோட நடிச்சேன்

அந்த பயத்தோட நடிச்சேன்

கடுவா படத்தில் பிருத்விராஜ் உடன் நடிக்கும் போது பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். வாத்தி படத்தில் தனுஷ் உடன் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ரொம்பவே பெரிய பெரிய வசனங்கள், டான்ஸ், ரொமான்ஸ் என ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால், எங்கேயும் அவர் முன்னாடி தப்பு பண்ணிடக் கூடாது என்றும் தமிழ் தெரிந்திருந்தாலும், வசனத்தை தப்பாக உச்சரித்து விடக் கூடாது என்கிற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது என வெளிப்படையாக பேசி உள்ளார்.

ரொம்பவே உதவி

ரொம்பவே உதவி

மிகப்பெரிய நடிகர் என்கிற பந்தா எல்லாம் காட்டாமல், சினிமாவை பற்றி தனக்கு தெரிந்த விஷயங்களையும் நுணுக்கங்களையும் அவ்வளவு எளிதாக எனக்கு புரியும் படி தனுஷ் சொல்லிக் கொடுப்பார். வாத்தி படத்தில் என் கதாபாத்திரத்தை ஈஸியாக நடித்து முடிக்க அவர் ரொம்பவே உதவி செய்துள்ளார் என்றும் சம்யுக்தா மேனன் பேசியுள்ளார்.

ஏற்கனவே தமிழில்

ஏற்கனவே தமிழில்

கடந்த 2016ம் ஆண்டு பாப்கார்ன் எனும் மலையாளப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சம்யுக்தா மேனன் நடிகர் கிருஷ்ணாவின் களரி படத்தின் மூலம் 2018ம் ஆண்டே தமிழில் அறிமுகமாகி விட்டார். ஜூலை காற்றில், எரிடா உள்ளிட்ட தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார். பீம்லா நாயக், பிம்பிசாரா, கடுவா என தொடர்ந்து அவர் நடிப்பில் பல பெரிய படங்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X