வாரிசு விஜய்க்குப் போட்டியாக போஸ்டர் வெளியிட்ட தனுஷ்… அப்போ அஜித்தின் துணிவு அப்டேட் வராதா?
சென்னை: தனுஷ் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
வாத்தி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தீபாவளி பரிசாக தனுஷ் ரசிகர்களுக்கு வாத்தி படக்குழு சர்ப்ரைஸாக ஒரு ட்ரீட் கொடுத்துள்ளது.

வாத்தியாக தனுஷ்
தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் இருந்து தி கிரே மேன், தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என 4 படங்கள் இந்தாண்டு வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் மேலும் ஒரு படம் இந்தாண்டு பட்டியலில் இனையவுள்ளது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் 'வாத்தி' திரைப்படம் தான் அது. வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படம் தமிழில் 'வாத்தி' என்ற டைட்டிலும், தெலுங்கில் 'சார்' என்ற தலைப்பிலும் உருவாகி வருகிறது. தனுஷுக்கு இந்தப் படத்தில் வாத்தியார் கேரக்டர் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தீபாவளி போஸ்டர்
தனுஷுடன் சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'வாத்தி' படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளது வாத்தி டீம். ஆக்சனில் அதகளம் செய்யும் தனுஷின் போஸ்டருடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது. தனுஷின் வாத்தி போஸ்டர் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது. இதனிடையே நடிகர் தனுஷ் தீபாவளி வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார்.

துணிவு போஸ்டர்?
தனுஷின் வாத்தி போஸ்டர் ஒருபக்கம் வைரலாகி வரும் நிலையில், விஜய்யின் வாரிசு போஸ்டரும் இனையத்தை கலங்கடித்து வருகிறது. ஆனால், அஜித்தின் துணிவு படக்குழு ரசிகர்களுக்கு எந்த சர்ப்ரைஸும் கொடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது. இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். விஜய்யின் வாரிசு போஸ்டர், தனுஷின் வாத்தி போஸ்டர் வெளியான நிலையில், அஜித்தின் துணிவு போஸ்டர் அல்லது அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

வாத்தி ரிலீஸ் தேதி?
இதனிடையே வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வாத்தி திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்துவிட்டது. ஆனால், தற்போது சில முன்னணி நடிகர்களின் படங்கள் டிசம்பரில் வெளியாகவுள்ளதால், வாத்தி படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











