»   »  வட சென்னைக்காக தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி, ஜீவா?

வட சென்னைக்காக தனுஷுடன் இணையும் விஜய் சேதுபதி, ஜீவா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றி மாறனின் வட சென்னை படத்தில் தனுஷுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஜீவாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தான் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் 6 தேசிய விருதுகளை அள்ளி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர் வெற்றி மாறன். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை திரைப்படம் வருகின்ற ஜனவரி 29 ம் தேதி வெளியாகிறது.


Vada Chennai: Dhanush Team Up with Vijay Sethupathi, Jiiva

தற்போது தனது கனவுப் படமான வட சென்னையை தனுஷுடன் இணைந்து தொடங்கவிருக்கிறார் வெற்றி மாறன். இந்தப் படத்திற்காக தனுஷ் கிட்டத்தட்ட 200 நாட்களை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.


இந்தப் படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரம் தவிர இன்னும் 2 முக்கியமான படத்திற்கு வலுவூட்டக் கூடிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனவாம்.


இந்தக் கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோருடன் வட சென்னை படக்குழுவினர் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.


மேலும் இதில் வில்லனாக நடிப்பதற்கு ராணா டகுபதியை அணுகியதாகவும், அவரிடம் தேதிகள் இல்லை என்பதால் வேறு ஒரு அழுத்தமான வில்லனை வெற்றிமாறன் தேடி வருவதாகவும் கூறுகின்றனர்.


வட சென்னையைப் பற்றி நமக்குத் தெரியாத மற்றும் அதன் இருண்ட பக்கங்களை இதில் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஜீவா ஆகியோரும் இணையும் போது படத்தின் பிரமாண்டம் இன்னும் அதிகமாகும்.


ஆனால் இது சாத்தியமாகுமா?இல்லையா? என்பது இன்னும் ஒருசில தினங்களில் தெரிந்து விடும்.

English summary
Sources Said Vijay Sethupathi and Jiiva will Play Important Roles in Dhanush-Vetri Maran's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil