»   »  பூஜையுடன் தொடங்கியது தனுஷ்-வெற்றிமாறனின் 'வட சென்னை'

பூஜையுடன் தொடங்கியது தனுஷ்-வெற்றிமாறனின் 'வட சென்னை'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ்-வெற்றிமாறனின் வட சென்னை படத்தின் முதல் பாகம் இன்று பூஜையுடன் தொடங்கியது.

பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் வெற்றிகளுக்குப்பின் வெற்றிமாறன்-தனுஷ் 3 வது முறையாக இணையும் படம் வட சென்னை.


Vada Chennai Movie Starts with Pooja

தனுஷின் கொடி, தொடரி போன்ற படங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போனது. இதனால் இப்படம் தொடங்கப்படுமா? என்ற கேள்விகளும் எழத் தவறவில்லை.


இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர்.


இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி ஆகியோரை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளனர்.


இதற்காக பிரமாண்ட ஜெயில் அரங்குகளை அமைத்திருக்கின்றனர். 2 பகுதிகளாக உருவாகும் இப்படத்தை லைக்காவுடன் இணைந்து தனுஷ் தயாரிக்கிறார்.


வெற்றிமாறன் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷை தூக்கிவிட்டு, அதற்குப்பதிலாக சந்தோஷ் நாராயாணனை இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.


தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி ஹிட்டுடன் சேர்த்து தேசிய விருதுகளையும் கைப்பற்றுபவர்கள் என்பதால், இப்படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

English summary
Dhanush-Vetri Maran's Vada Chennai Movie Pooja Held Today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil