»   »  வட சென்னை மேயில் தொடங்கும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

வட சென்னை மேயில் தொடங்கும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெற்றிமாறன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடசென்னை படப்பிடிப்பு திட்டமிட்டபடி மே மாதம் தொடங்கும் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விசாரணை ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தனுஷ், சமந்தா, ஆண்ட்ரியா நடிப்பில் வடசென்னை படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன் அறிவித்தார்.


Vada Chennai Shooting Starts from May

ஆனால் கொடி படத்திற்குப் பின் கவுதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' வில் தான் நடிப்பதாக தனுஷ் அறிவித்தார்.மேலும் அடுத்து ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் அவர் தேதிகளை ஒதுக்கியிருந்தார்.


இதனால் வட சென்னை திட்டமிட்ட படி தொடங்குமா? என்ற கேள்விகள் எழத் தொடங்கின. மேலும் இந்த வருடத்தின் இறுதியில் தான் இப்படம் தொடங்கப்படும் என்றும் கூறினர்.


இந்நிலையில் தற்போது இந்த வதந்திகளுக்கு இயக்குநர் வெற்றிமாறன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அவர் கூறும்போது "மே மாதம் 'வடசென்னை' படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்.


அதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன' என்று தெரிவித்திருக்கிறார். 2 பாகங்களாக உருவாகும் இப்படத்தில் ஆண்ட்ரியா விலைமாது வேடத்திலும், சமந்தா குப்பத்துப் பெண்ணாகவும் நடிக்கவுள்ளனர்.


வடசென்னையில் கொடி கட்டிப் பறந்த உண்மையான ரவுடி ஒருவனின் வாழ்க்கை தான் வடசென்னை படமாக உருவாவது குறிப்பிடத்தக்கது.

English summary
"Vada Chennai Shooting Starts from May" Director Vetri Maran Reveals this Information in Recent Interview.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil